சென்னை: மே 15 திங்கள்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதனுடன் ‘போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிப்போம்’ என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அமைச்சருடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான பேட்ஜ் மற்றும் உரிமம் உள்ளவர்கள் உடனடியாக கழக மேலாளரை உரிய சர்டிபிகேட்களோடு அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னேற்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திவிட்டு ஓய்வுபெற்ற ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க்வும், தற்காலிக பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கப்சா நிருபரிடம் கூறியவர் மேலும் கூறியதாவது: ஜெயலலிதா ஆட்சியின்போது கொண்டுவந்த TESMA (The essential services maintenance act) சட்டத்தின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் பணியால் சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுகிறது. நேற்று முதல் மெட்ரோ ரெயில் ஓட்டமும் தொடங்கிவிட்டது. மக்கள் உயிரைப் பணையம் வைத்து பள்ளங்களில் புகுந்து லாவகமாக் பேருதை இயக்க புதிய டிரைவர்கள் தேவை – போக்குவரத்து துறை ஸ்டிரைக்கால் இந்த புதிய வேலை வாய்ப்பு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற சாகச வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கிட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் இருந்து இயங்காத அரசை இயக்க மோடி அவர்கள் டிரைவர் கண்டக்டர் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

சென்னையில் திருமங்கலம் நேரு பூங்கா இடையிலான மெட்ரோ தடத்தை இயக்கி வைத்த மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு அவர்கள் கூறும் போது கூட “மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். அனைவரையும் கவரக்கூடிய ஒரு தலைவர். மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர். ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்க உயிருடன் இல்லை. சென்னையில் போக்குவரத்து தேவையை சமாளிக்கும் வகையில் மெட்ரோ சேவையை தொடங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஜெயலலிதா தமிழக மக்களுக்கு டாஸ்மாக் போல் என்னென்ன சிறந்த திட்டங்களை அறிவித்தாரோ, அந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அதற்கு இயாங்காத அரசை இயக்க திறமையுள்ள பாஜக அடிமை டிரைவர் தேவை. மேலும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று உறுதி கூறுகிறேன். மீறி பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலோ, ஒத்துழைக்க மறுத்தாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்று கூறி இருக்கிறார்கள். “இயங்காத பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மட்டும் என்னிடம் விண்ணப்பம் அளிக்கலாம், இயங்காத அரசை இயக்க நினைக்கும் டிரைவர்கள் நேரடியாக டில்லியை அணுகலாம்.” என்றார் அமைச்சர்.

பகிர்

There are no comments yet