ஆத்தூர்: ஜெயலலிதா கார் டிரைவர் விபத்து வழக்கு தொடர்பாக, எம்.எல்.ஏ., ஆறுகுட்டி, நாளை, ஆத்தூர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சமுத்திரகாட்டுவளவை சேர்ந்தவர் கனகராஜ், 36. ஜெயலலிதாவுக்கு, கார் டிரைவராக பணிபுரிந்த இவர், கடந்த, 28 இரவு ஆத்தூர் புறவழிச்சாலையில் பைக்கில் வந்தபோது, கார் மோதி உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் கனகராஜ் என்பதால், நீலகிரி எஸ்.பி., முரளிரம்பா தலைமையிலான தனிப்படை போலீசார், கடந்த, 3ல், கனகராஜ் வீட்டில் உள்ள நபர்கள், ஆத்தூரில் உள்ள சித்தி சரசு உள்பட உறவினர்களிடம் விசாரித்து, வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

கனகராஜ் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வந்தனர். நேற்று கனகராஜின் குடும்பத்தினரிடம் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் கனகராஜ் பலமுறை செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆறுக்குட்டி நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அண்ணன் ஓபிஎஸ் அம்மா சமாதியில் உட்கார்ந்து பலமுறை கேட்டுப் பார்த்தும், ஆன்மா பதில் ஏதும் சொல்லவில்லை. எனவே எப்படியாவது சசிகலாவிடம் இருந்து போயஸ் கார்டனை மீட்கவும், சொத்துக்களை கைப்பற்றவும் ஜெயாவின் உயிலை தேடி கோடா நாடு எஸ்டேட்டில் அதிரடியாக நுழைந்தோம். உயிலை கண்டுபிடிக்க முடியாததால் கொலை கொள்ளை முயற்சி போல் செட் அப் செய்து விட்டு வந்தோம். இதில் என் புனித அன்னான் ஓபிஎஸ்சுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

There are no comments yet