சென்னை: தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவார்கள்.

அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது: எனது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் எல்கே ஜி, 1-ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு வைப்போம். அப்போதுதான் அவர்களுக்கு என்னைப்போல் போட்டி, பொறாமை மனப்பான்மை இளமையில் இருந்தே வரும். மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் தியானம் செய்யவும், வளைந்து குனிந்து வணக்கம் சொல்லவும் புதிய பாடங்கள் சேர்க்கப்படும். நீட் தேர்வுகளினால் சிரமப்படும் மாணவர்கள் இனிமேல் பரீட்சையே எழுதாமல் நேரடியாக மருத்துவர் பணிக்கும் செல்லும் வகையில் அவர்களுக்காக ஸ்பெஷல் மருத்துவமனைகள் திறந்து ஜனத்தொகையை குறைக்க முயற்சி எடுப்போம் என்றார்.

மேலும் இந்த எடுபிடு பழனிச்சாமி அரசு, ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் அவர்களின் மாணவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, ஜாலியாக இருக்கவிடாமல் 11-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு வைத்து மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. இதை எதிர்த்து அம்மாவின் சமாதியில் தியானம் இருந்து, நீதி கேட்டு பயணம் செல்வேன் என்று கூறினார்.

பகிர்

There are no comments yet