சென்னை: நடிகர் ரஜினிகாந்த், கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வாத விவாதங்கள், ஹேஷ்யங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தது.

இன்று ரஜினி பேசியதாவது. ஒழுக்கம்தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்ல சொன்ன எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்த நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைபிடிக்க வேண்டும். எப்படி என் மகள், மருமகன் அனைவரும் என் பேச்சை கேட்டு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்களா என்று நீங்களே பாருங்கள்.

எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். உங்களோட உழைப்பை உறிஞ்சி பெரியா ஸ்டாரா இருக்கேன். கர்நாடகாவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தா கூட நீங்க என்னை ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். என் பெற்றோர், மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க, அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நீங்க என்னை தூக்கிப்போட்டா நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கணும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல. சரி அதுக்கு நீ என்ன சரிசெய்வது அப்படீன்னு சொன்னா. ஆமாம் இருக்காங்க, தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி, அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலித் மக்களுக்காக உழைக்கும் அற்புத தலைவர். சீமான், போராளி. அவர் கருத்துக்களை கேட்டு பிரம்மிச்சு போயிருக்கேன்…

அது போல இன்னும் இருக்காங்க சில தேசிய கட்சிகள். ஆனால் அமைப்பு கெட்டு போயிருக்கே. அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியான சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்.

என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சியடைய முடியும். நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாம் செடி வளர தேவையான உரம் மாதிரி, அவர்கள் நம் வளர்ச்சிக்கே உதவுகிறார்கள். திட்டிய திட்டுக்கள் திட்டியவர்களுக்கே ஒருமுறை புத்தர் தன் சீடர்களோடு சென்றபோது, வழியில் சிலர் புத்தரை திட்டிக்கொண்டிருந்தார். அதை கேட்ட புத்தர் அமைதியாக நிற்க உடன் வந்த சீடர்களும் அமைதியாக நின்றனர். அந்த நபர் சென்ற பின், சீடர்கள் புத்தரிடம் கேட்டனர். அதற்கு புத்தர் சொன்னார், ‘அவர் திட்டிக் கொட்டினார் ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது அவருடனையே சென்றுவிட்டது’, என்று கூறினார்.

பழைய காலத்தில ராஜாக்கள் கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது, ஆயிரக் கணக்கில்தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் வீரர்கள் மாதிரிதான். அதுக்காகத்தான் ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், கபடின்னு வீர விளையாட்டுகள் வச்சிருந்தாங்க. மக்கள் இதில் பயிற்சி பெற்று முழு வீரர்களா ஆகிடுவாங்க. போர் வரும்போது படையுடன் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரை அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அது போல நாம் அனைவரும் அவரவர் கடைமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம். நான் என் வேலைகளைப் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன். போர்க்களத்தில் இறங்குவோம்”, என்றார்.

நமது கப்ஸா நிருபர் போர் எப்போது வரும் என்று ரஜினியுடன் கேட்டபோது: எனது எந்திரன் 2.0 பட வேலைகள் முடிந்து விட்டன. படம் ரிலீஸ் அன்று போர் வரும். அது தான் எனக்கு போர். மத்தவங்களுக்கு அது போர் அடிக்கற படம் என்று சொல்றதுக்கு முன்னடியே நானே அத போர் என்று சொல்லிவிட்டேன் என்று வழக்கம் போல் தானும் குழம்பி நிருபரையும் குழப்பினார்.

There are no comments yet