சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் அகால மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட, பன்னீர்செல்வம் போர்க்கொடி எழுப்பினார். பின், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மெழுகுவர்த்தி தயாரிப்பில் பிசியாக உள்ளார் இடையிடையே தொண்டர்களையும் எம்.எல்.ஏக்களையும் சந்த்திப்பது வழக்கம்.
கட்சிப் பிளவு பிரச்னையால், சசிகலா யாரையும் சந்திக்காமல் கொஞ்ச நாள் இருந்து வந்தார். பின்னர், சொத்துக்குக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்து, எம்.எல்.ஏ கருணாஸ் இன்று சந்தித்தார். இந்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள், வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் ஆகியோரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து கப்சா நிருபரிடம் தெரிவித்த கருணாஸ்: சின்னம்மா சுமார் 40 நிமிடங்கள் அதிமுகவை பற்றி மனமுருகி பேசினார். ஜெயலலிதா வளர்த்த கட்சி எக்காரணத்தை கொண்டும் ஜெயலலிதாவை அப்பல்லோவில் “வைத்து” செய்தது போல் சிதைந்து விடக்கூடாது என்று கூறினார். தொண்டர்களின் கடிதங்களுக்கு தொடர்ந்து கருணாநிதி போல் பதில் கடிதம் எழுதுவேன் என சசிகலா தெரிவித்தார் என்று கூறினார். ஜெயலலிதா உடல் அடக்கத்தின்போது சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து பரபரப்பு கிளப்பினேன். முன்னதாக எம்.எல்.ஏ ஆனவுடன் சட்டமன்றத்தில் “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடி பாராட்டுப் பெற்றேன். அதே போல் சின்னம்மாவிடம் பாட்டுப் பாடி சென்னையில் மின்வெட்டு காலங்களில் ஏற்றி இருளைப்போக்க ரெண்டு மெழுகுவர்த்தி வாங்கிக் கொண்டு வர நினைத்தேன். “சட்டமன்றத்தில் பாட்டுப்பாடி ஜெயலலிதாவை அப்பல்லோவில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தது போல் என்னை சிறைக்குள் வைத்து கதையை முடிக்க கவிதை பாடுகிறாயா?” என்று எரிந்து விழுந்தார்.. பின்னங்கால் பிடறியில் பட ஓடி வந்துவிட்டேன் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks