சென்னை, : ”பிரதமருடன் அரசியல் எதுவும் பேசவில்லை,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.டில்லியில், பிரதமரை சந்தித்த பின், நேற்று மாலை, 6:50 மணிக்கு, பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், அவர் கூறியதாவது: ‘உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி அமையுமா’ என, நிருபர்கள் கேட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சி நிர்வாகிகளை கலந்து பேசி, உரிய முடிவு எடுக்கப்படும் என்றேன். கூட்டணி குறித்து, வேறு எதுவும் கூறவில்லை. தமிழக மக்களின் தேவைகளை, தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளை, பிரதமரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்தோம். அவரும் கவனமுடன் கேட்டார்; பரிசீலிப்பதாக கூறினார். பிரதமரிடம், அரசியல் பேசவில்லை. ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்பது உட்பட, எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை, தர்ம யுத்தம் தொடரும். கோரிக்கையை நிறைவேற்றினால், அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று கூறினார்.

ஓபிஎஸ்சின் இந்த பேட்டியில் சமாதானமடையாத நமது கப்ஸா நிருபர், ஓபிஎஸ்சை கொஞ்சம் அமுக்கி கேட்டபோது கமுக்கமாக அவர் கூறியது: ரெம்ப நாட்களாக டிகாக்ஷன் இல்லாமல் டீ போட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்குள்ள அனைத்து டீ மாஸ்டர்களிடமும் கேட்டேன் அவர்களுக்கு தெரியவில்லை, அதனால் தான் டெல்லி சென்று தலைமை டீ மாஸ்டர் மோடியிடம் விவாதித்தேன். அவர் காவி கலரில் இருந்தால் போதும் அது டீ தான், எனவே டிகாக்ஷன் தேவையில்லை என்று கூறினார். எனவே தமிழ் நாட்டில் காவியை வைத்து வியாபாரம் செய்ய என்னை ஏஜெண்டாக நியமித்துள்ளார் என்று உண்மையை போட்டுடைத்தார்.

பகிர்

There are no comments yet