சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, திருபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் அஞ்சலி செலுத் தினர். பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

ரஜினி எனது 40 ஆண்டுகால நண்பர். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அதேவேளையில் அவர் மாநில கட்சிகளிலோ அல்லது தேசிய கட்சிகளிலோ சேரமாட்டார் என நம்புகிறேன். அவர் தேசிய சிந்தனை உள்ளவர். எனவே, தனிக்கட்சி தொடங்குவார் என நம்புகிறேன். அவரது கட்சியில் நான் சேர்வதற்காகவே கட்டாயம் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனது வாழ்நாள் ஆசையெல்லாம் கட்சி மாறுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் வகை யில், மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. அரசியல் தலைவர் களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதை, வன்மை யாகக் கண்டிக்கிறோம். காங்கிரஸ் ஆட்சில் ஊழல் நடந்தபோது நான் அந்த கட்சியில் இல்லை. அது போல் பாஜக ஆட்சியில் இருக்கும் போது நான் அங்கு இல்லை. நான் எந்தக்கட்சிக்கு போனாலும் அந்த கட்சி எதிர் கட்சியாகி விடுகிறது. அது என்னுடைய அதிர்ஷ்டம்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமரை சந்திப்பதற்கு ஸ்டா லினுக்கு மத்திய அரசு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை சந்திப் பதற்கும் ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அனால் அவர் ஓபிஎஸ் சையும், ரஜினியையும் சந்திக்கிறார். நடிகைகள் என்றால் அப்பாயிண்ட்மென்ட் இல்லாமலேயே சந்திக்கிறார் இது தவறு என்று கூறினார்.

There are no comments yet