சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் கடந்த இருபது வருடங்களாக தமிழக அரசியல்வாதிகளும், மக்களும் ஒருவித ‘டாஸ்மாக்’ நிலையிலேயே இருந்து வருகிறார்கள். எந்த அரசியல் பின்புலமில்லாமல் ஒவ்வொரு தேர்தலின் போதும் எதிர்பார்ப்பை எகிற விடுவார் ரஜினி. ரஜினியின் இந்த புகழுக்கும் திறமைக்கும் என்ன காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மக்கள் நம்பும் இந்த ஊடகங்ககளின் மூலம் தான் ஆன்ட்டி இல்லுமினாட்டிகள் புகழ் பரப்பப்பட்டு வருகிறது.. “கார்ப்பரேட்” கலாசார சதிகளையும், அதன் நோக்கங்களையும் கற்றுக்கொண்டு அரசியலுக்கு வராமலேயே மக்களை ஆட்டிப் படைத்து வருபவர் ரஜினி.

அமெரிக்க டாலரில் இடம் பெற்றிருக்கும் ஒற்றைக் கண் கொண்ட முக்கோணம் தான் இல்லுமினாட்டிகளின் சின்னம். டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிடும், மேல்பகுதியில் ஒரு கண்ணும் இருக்கும். அந்த சின்னம் கொடுக்கும் அர்த்தத்தின்படி ‘அரசியல் நிகழ்வுகளின் ஒவ்வொரு அசைவும்’ ரஜினியால் கண்காணிக்கப்படுகின்றன. இலுமினாட்டிகள் பல துறைகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். தங்களுடைய போதனைகளுக்கும் பொருட்களுக்கும் அடிமையாக்கி மக்களை ஒரே சிந்தனையில் ஒரே சிந்தனையில் செதுக்குவதால் ஓர் உலகம் ஓர் அரசு என்ற கொள்கையை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புபவர் இந்த இல்லுமினாட்டி ரஜினி.

‘முதல் நாள் முதல் காட்சி’ என்ற பதத்தை உருவாக்கியவரே ரஜினிதான். உலகின் மூத்த குடிமக்களான தமிழ் மக்களை அழிக்க கிளம்பியிருக்கும் இல்லுமினாட்டி இந்த ரஜினி. வெளியாகும் எல்லா ரஜினி சினிமாக்களும் இல்லுமினாட்டிகளின் சதி. டாஸ்மாக் ஆரம்பித்தபொழுது யாரும் இந்த அளவுக்கு குடிக்கவில்லை. ரஜினியின் தத்துவப்பாடல்களை திரும்ப திரும்ப எப் எம். ரேடியோவில் கேட்டுக் கேட்டு, சினிமாக்களில் ரஜினி குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகளை பெருகிய தொலைக்காட்சிகளில் மாறி மாறி ஒளிபரப்பி ஊரில் ஒருத்தன் விடாமல் குடிக்க வைத்து, ரஜினி போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் “தாயிடம் குடித்த பாலைக் கக்க வைப்பேன்” என்ற நரபலி வாடை வீசும் வசனங்களைப் பேசி வில்லனாக நடித்தவர்தான் ரஜினி, பின்னர் கதாநாயாகன் ஆகி ‘பாபா’வின் தோல்வியை கண்ட பிறகு, மீண்டும் சந்திரமுகியில், வில்லனாக தன் சுயரூபத்தை காட்டி தனது இடத்தைப்பிடித்தார்.

அடுத்து நடக்கப்போகிற ஒரு விஷயத்தை எப்பொழுதாவது யாராவது சொன்னா அது சாதாரண விஷயம் ஆனால் ஒரை பொய்யை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நம்பும்படி கூறி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி கோடிகளை சேர்த்து வைத்திருக்கும் ரஜினி ஒரு கேடி இல்லுமினாட்டி என்பதில் சந்தேகம் இல்லை.

இல்லுமினாட்டி அமைப்பை சேர்ந்தவர்கள் செய்தி பறிமாற்றம் ஏராளமான குறியீடுகளால் நிரம்பியது. அது போல் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னாமாதிரி, எச்சச்ச கச்சச்ச, லக லக லக, இது எப்டி இருக்கு, கதம் கதம், போன்ற பன்ச் டயலாக்குகளை குறியீடுகளாக வைத்திருப்பவர் ரஜினி. ஸ்டைல் என்ற பெயரில் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை பரப்பி ரசிகனின் வாழ்க்கையை சீரழித்தவர். பசியில் வாடும் குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் கட் அவுட் அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பாலை ரோட்டில் கொட்டியவர். இல்லுமினாட்டியின் திட்டங்களைத் தெரிந்துகொண்டு அவர்களை நிரூபிக்க ‘ஆன்ட்டி இல்லுமினாட்டிகள்’ ஆதாரங்களை திரட்ட, நம் ஊர்க்காரர்களும் இதில் களமிறங்கி உள்ளனர். அவர்களுள் சைதாப்பேட்டை சந்துக்குள் நின்று கொண்டு ராஜ பக்சேவை சண்டைக்கு இழுக்கும் சீமான், திருமாவளவன், சுப்ரமணியம் சாமியும் அடங்குவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் பிடித்துச்சென்றது இல்லுமினாட்டிகள்தான். சினிமா மூலமாக ஏராளமான ரசிகர்களைக் கைப்பற்றியுள்ள கமல்ஹாசனுக்கும் இல்லுமினாட்டிக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் கட்டுரைகளைத் தட்டி வைத்திருக்கிறார்கள். இதில் ரஜினியை பற்றிய கட்டுரைகள் கட்டுக்கட்டாக கிடக்கின்றன. இந்தியப் பிரதமர் யார்? தமிழக முதல்வர் யார்? என்பதைக்கூட இல்லுமினாட்டிகள்தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள் என கப்சா நிருபர் விளக்கம் தருகிறார். சுருக்கமா சொன்னால், ‘ரஜினி போன்ற இல்லுமினாட்டிகள்தான் உலகின் அத்தனை அசைவுகளுக்கும் காரணம்’ என நம்பவைக்க ஒரு கும்பலும், ‘இதெல்லாம் சும்மா உல்லுலாயி…’ என ஜஸ்ட் லைக் தட்டாகத் தட்டிவிடும் மீம் கிரியேட்டர் கும்பலுமாய் இரண்டு இயக்கங்கள் இருக்கின்றன. இந்த போட்டியில் வெல்லப்போவது ரஜினி இல்லுமினாட்டியா அல்லது ஆன்ட்டி இல்லுமினாட்டியகிய மக்களா என அடுத்த தேர்தல் அல்லது ரஜினியின் படம் வரும்போது தான் தெரியும்.” என்றார் உங்கள் நியூஸ் கப்சா நிருபர்.

பகிர்

There are no comments yet