சென்னை: ரஜினியின் ரசிகர் சந்திப்பின் இறுதி நாள் பேச்சின் போது “தமிழ் நாட்டில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என ரஜினி பேசியதற்கு குட்டி அம்மா தீபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாலையில் தொண்டர்கள் இல்லாத தனது வீட்டு பால்கனியில் நின்று கையசைத்து வெளியிட்ட அறிக்கையில் குட்டி அம்மா தீபா “ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர். நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்னிலையில், தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று கூறியிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது. சங்கக் கட்டிடம் கட்டப்போய் நீதிமன்ற வழக்கில் உள்ளது. படம் வெளியான முதல் நாளே இணைய தளத்தில் வெளிவந்து விடுகிறது. கர்நாடகாவில் 100க்கும் மேற்பட்ட பஸ்களை எறித்த போது ரஜினி ஏன் அமைதி காத்தார்.? அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா? தமிழக அரசியல் சிஸ்டத்தை தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா காட்டிய ஆட்சி நிர்வாக தன்மையை பாடமாக ஏற்று எம்ஜிஆரும், அம்மா காட்டிய நிர்வாக திறமையை சரிசெய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க (அ)சிங்கங்கள் தயாராக உள்ளனர். தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றறுக்கொள்ள முடியல்லை.

மேலும், காவேரி பிரச்சனையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளரா? நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன்? இந்தி எதிர்ப்பு குறித்து பேசதயாரா? ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வாயை திறக்காதது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா? அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும். ரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று அக்கப்போர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.” இவ்வாறு அறிக்கையில் தீபா கூறி உள்ளார். இது குறித்து சுருக்கமாக கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார். “ரஜினியை எதிர்த்து அறிக்கை விட்டு பிரபலமாகி விடலாம் என்று அறிக்கை வெளியிட்டேன்.. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ளது போல் தமிழகத்தில் அதற்கு கடும் போட்டி உள்ளது. ரஜினியை 44 வருடங்களா தமிழகமக்களுக்கு தெரியும். நான் யாருனே தெரியாது. அத்தை அப்பல்லோவில் அட்மிட் ஆன பிறகு தான் என்னை மக்கள் கண்டு கொண்டார்கள். 44 வருஷம் இருந்தால் ரஜினி தமிழனா? அப்ப 200 வருஷம் இங்க இருந்த வெள்ளையன்? என்று ராதாரவி கூட சொல்லி இருக்கிறார். அவருக்கு போதும் என்கிற அளவுக்கு புகழும் பணமும் இருக்கின்றது அவர் தலைமுறை மற்றும் அல்ல அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து அவருக்கு சொத்து இருக்கின்றது. எங்களுக்கு அத்தை விட்டுச்சென்ற 100 கோடி ரூபாய் கடன் தான் இருக்கிறது. எந்த நேரம் நீதி மன்றத்தில் இருந்து சம்மன்ஸ் வரும் என தெரியவில்லை.

அத்தை இருக்கும் வரை சினிமா சிஸ்டத்தில் நத்தையாக ஊறிக்கிடந்த ரஜினி இப்போது கம்ப்யூட்டர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று பேசுகிறார். என் அத்தை விஸ்வரூபம் எடுத்த கமலுக்கே இனிமா கொடுத்தவர். அவர் இருந்தால் இந்நேரம் இப்படி பேச விட்டிருப்பாரா? ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவருடைய சொந்த விருப்பம். அரசியல்வாதி ஆனால் நிம்மதி கெடும். நிம்மதி போனால் தூக்கம் கெட்டு உடல்நலம் பாதிக்கும். ரஜினியின் டைஜெஸ்டிவ் சிஸ்டம் கிட்னி சிஸ்டம் பாதிக்கும். என்னைப் போல் சின்ன வயதிலிருந்து அரசியலில் இருந்தால் பழகியிருக்கும். வயதான காலத்தில் அரசியலுக்கு வருவது உச்சிதமாக தெரியவில்லை. ரஜினி செய்த அலப்பரையில் பிரஷர் சுகர் மாத்திரையை மறந்து விட்டேன், என்று பக்கத்தில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீரை மடக் மடக் என அருந்தினார்.

பகிர்

There are no comments yet