சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக நிறுவனர், பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. சென்னை எழும்பூர் ராணி சீதை மகாலில் கடந்த 2009-ல் “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வைகோ கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீசார் தேச துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

தேசதுரோக வழக்கின் கீழ் வைகோவை கைது செய்யப்பட்டார். பின்னர் வைகோ ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் இந்த வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி எழும்பூர் நீதி்மன்றத்தில் ஆஜராகி வழக்கை விரைவில் முடியுங்கள் அல்லது தன்னை கைது செய்யுங்கள் என்று கூறினார் வைகோ. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி கோபிநாத், ஜாமீனில் செல்கிறார்களா என்று கேட்டதற்கு வைகோ மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று திடீரென வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் நாளை நடைபெற இருக்கிறது.

இது குறித்து வைகோவை சிறையில் வார்டன் வேடத்தில் வந்த நமது கப்ஸா நிருபர் எடுத்த பெட்டியில் வைகோ கூறியதாவது: வெளியில் கட்சியினர் தொல்லை தாங்கமுடியாமல் கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கலாம் என்று சிறைக்கு வந்தேன். இங்கு யார் தொந்திரவு இல்லாமல் சிவனே என்று புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறேன். அரசியலில் இருந்து ரிட்டையர் ஆகலாமா என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது ரஜினி அரசியலில் குதிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இருக்கும் மிச்ச காலத்தை ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்து கழித்து தொண்டு செய்யலாம் என்று இருக்கிறேன். என்ன இருந்தாலும் கேப்டன் வேறு சூப்பர் ஸ்டார் வேறு. அவரையும் இவரையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது என்று உற்சாகமாக சொன்னார். ஆக அசைன்மென்ட்க்கு வைகோ ரெடி, கைப்புள்ள கிளம்பிருச்சு என்று ரஜினி ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளார்.

There are no comments yet