சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அண்ணா தி.மு.க ஆட்சி அமைத்து சில நாட்களில் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் பதவியில் 100 நாள்களைக் கடக்க இருக்கிறார். இந்த 100 நாள்களில் ஏராளமான சம்பவங்கள் நடந்துவிட்டன. தினகரன் கைது, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், சசிகலா உறவுகளுக்கு மறைமுக ஆதரவு என ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. சசிகலா குடும்பத்துடன் எந்தவித உறவும் இல்லை எனச் சொல்லிக் கொண்டே, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை சகாக்கள் சென்று பார்க்கின்றனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மாநில சுயாட்சி முழக்கம் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுவிட்டது’ என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை வந்த முதல்வர், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பிரதமருடனான சந்திப்பு குறித்து கப்சா நிருபரிடம் கண்ணீர் மல்க அளித்த பேட்டி: “பதவியை காப்பாத்திக்க மோடி காலில் விழச் சென்ற நான் அரசு திட்டங்களுக்காக சென்றேன் என்று நிருபர்கள் காதில் பூ சுற்றினேன்! நான், ஓ.பி.எஸ் இருவரில் யார் சிறந்த அடிமை என்பதிலும் பாஜக கைக்கூலி என்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது. நானும் ஓபிஎஸ்சும் இப்படியே மாறி மாறி டில்லி போய்விட்டு வருகிறோம் . இது வரை ஒரு முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாக ஆக்கிவிடுவோம்.

பாஜக நம்மை முன்னேற்றம் அடையாமல் வஞ்சித்து இந்தி திணிப்பு, நீட் தேர்வு என காய் நகர்த்தி வருகிறது. அதற்கு நாங்கள் துணை போகிறோம், போவோம். வரும் டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். உச்ச நீதி மன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு கிரிமினல் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை மாண்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் வைப்பது சட்டமன்றத்திற்கே தலைகுனிவு. அதுவும் மோடி திறந்துவைப்பது அதைவிட கேவலம். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் தான் இடி, ஆனால் எனக்கு நாலாப்பக்கத்தில் இருந்து இடி. டில்லி சென்ற நான் தமிழ் நாடு மக்கள் பிரச்சனை பத்தி பேசவில்லை, மாறாக வடிவேலு வீரபாகு கதாப்பாத்திரமாக நடித்த படத்தில் தனது அக்காவை அனுப்பி விட்டு பேக்கரியை வாங்கி பிழைப்பு நடத்துவார். அது போல எனது தில்லி பயணத்தின் போது நான் பிரதமர் மோடி அவர்களிடம் ‘ஓ.பி.எஸ் பேச்சை கேட்டு எனது ஆட்சியை கலைத்து விடாதீர்கள், ஆட்சியை நான் கவனிக்கிறேன், சிறையில் இருக்கும் சின்னம்மா சசிகலாவையும் ஓ.பி.எஸ்சையும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.’ என்று கெஞ்சிவிட்டு வந்திருக்கிறேன். ஜனாதிபதி தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்பது குறித்து மூத்த நிர்வாகிகள் மோடிஜியிடமிருந்து பெட்டி வந்தவுடன் பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு முடிவு செய்வர்..” என்றார் எடுபிடி.

பகிர்

There are no comments yet