சென்னை: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆனதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளா அண்டை மாநிலங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கேரளாவில் 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. இதற்கு பல மட்டங்களிலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்வதற்கு நடிகர் கமல்ஹாசன் மின்னஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும், அந்த வாழ்த்தில் “கேரள அரசு பினராயி விஜயன் தலைமையில் ஓராண்டை நிறைவு செய்வதை எண்ணி மகிழ்கிறேன். அண்டை மாநிலங்களில் உள்ள அரசுகள் சிறந்த உதாரணமாக கேரள அரசு திகழ்ந்து வருகிறது, கேரள மக்களோடு இணைந்து இந்த மகிழ்ச்சியை நானும் கொண்டாடுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியைக் கேட்டு முதல்வர் எடப்பாடி மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அறிந்த கப்ஸா நிருபர், எடுபிடி பழனிசாமியை கோட்டையில் சந்தித்தபோது அவர் கூறியதாவது: சின்னம்மா தயவால் இங்கு இருக்கிறேன். எங்கள் அதிமுக அரசும் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. ஆனால் எங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் கேரளாவுக்கு மட்டும் கமல் ஹாசன் வாழ்த்து சொல்கிறார். இதே கமல் ஓபிஎஸ்சை ஆதரித்தவர் தான். இப்போது ஓபிஎஸ் பாஜக வின் அடிபொடியாக மாறிவிட்டதால் வாயை மூடிக்கொண்டிருக்கிறார். அவர் கேரளாவுக்கு போவதுதான் நல்லது. கமலுக்கு மேலும் மாற்றான் தொட்டது மல்லி மீது தான் எப்போதுமே ஓரு கண் என்று சாடினார்.
There are no comments yet
Or use one of these social networks