சென்னை: “ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தேன், இப்போது தமிழக மக்களைப்போல நானும் பொறுமையை இழந்துவிட்டேன்.” என்று பிரபல ரேடியோ தொகுப்பாளரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். 2015 தமிழக வெள்ள நிவாரணப் பணிகளின் போது பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து ரேடியோவில் நலப்பணிகள், நிவாரணப் பொருட்கள் குறித்து தொடர் நேரலை நிகழ்ச்சிகளை வழங்கி மக்களிடன் நற்பெயர் பெற்றவர் பாலாஜி. நடிகர் ராதாரவி ரஜினியை ‘குட்டி அம்மா தீபாவின் டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக் கூடாதா?’ என்று டிரைவருடன் ஒப்பிட்டு கேவலப் படுத்தியது போல், ஆர்ஜே பாலாஜி தனது 65 வயது மாமனாருடன் ரஜினியை ஒப்பிட்டு தன் பங்குக்கு கலாய்த்துள்ளார்.
கடந்த இருபதாண்டுகளாக ரஜினி பேசிய பன்ச் டயலாக்குகளை நினைவு கூர்ந்த பாலாஜி, ‘தமிழ்நாடு என் உயிர் நாடு’ என்ற பப்படமான ‘பாபா’ படத்தின் பாடல் வரிகளை பாடிக் காட்டி, அப்போது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ‘பெப்பே’ காட்டி விட்டார். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்கிறீர்களா என்ற கப்சா நிருபரின் காட்டமான கேள்விக்கு, “ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட முடியாது. அவர் இனியும் கபாலி அல்ல, காலவதியான கலைப்போலி, உடல் நலமும் குன்றி விட்டது, பன்ச் பேசி பேசி மனநலமும் குன்றி விடது. பைத்தியக் காரன் போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். செயல்பாடு ஒன்றும் இல்லை. ரஜினி ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
என் மாமனார் 65 வயது முதியவர், அவரிடம் பத்து வீட்டு வேலைகளை செய்யச் சொன்னால் இரண்டு தான் செய்கிறார். எட்டு வேலைகளை சாய்சில் விட்டு விடுகிறார். அதுபோல் ரஜினியிடம் இருந்து என்ன நாட்டுக்கு தேவையான நலத்திட்டங்களை எதிர்பார்க்க முடியும்? என் மாம்னாரை வேலை வாங்கும்போது, அவரை முட்டி போட வைத்து, பிரம்பால் அடிப்பேன், அதுமாதிரி ரஜினியை செய்தால் தாங்க மாட்டார், சினிமாவில் தான் சாகசம் செய்வார். ‘சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க கூட்டம் கூட்டமா வரும்’ என்றார்.. இப்போது அரசியல் சாக்கடையில் பன்னிங்களோடு பன்னிகளாக விழுந்து புரள தயாராகிவிட்டார், நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறேன்.” என்று வருத்தப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks