சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஜெயலலிதா. இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் இதயங்களைவிட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஜெயலலிதா எங்களுக்கு இறைவன் கொடுத்த இன்னொருதாய் என்று தமிழக மக்கள் எல்லோரும் அன்று மனம் நிறைந்து வாழ்த்தினார்கள். இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா படம் சட்டமன்றத்தில் திறக்கப்படக் கூடாது என்று கூக்குரல் இடுகிறார்கள். 1967-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை சிலருக்கு, ஒரு உறுப்பினரைக் கூட சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சல் சிலருக்கு.
ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட.,அவரது லட்சியங்களை நிறைவேற்ற உறுதி கொண்டிருக்கும் நமது எழுச்சி தந்த, அதிர்ச்சி சிலருக்கு…,அவர்கள் மட்டும்தான் அம்மா திருவுருவப் படம் சட்டமன்றத்திலே இடம் பெறக் கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஆண்ட சிலருக்கும், இனி ஆள நினைக்கும் சிலருக்கும், தலைசிறந்த தவறான முன்னுதாரணம் ஜெயலலிதா. பலருக்கு அரசியல் பாடமாகத் திகழ்பவர் ஜெயலலிதா படம் சட்டமன்றத்திலே திறக்கப்படுவது,சட்டமன்றத்திற்குப் பெருமை.தமிழ் நாட்டுக்கே பெருமை. ஏன்., உலக தமிழர்களுக்கே பெருமை
எப்படியெல்லாம் ஆட்சி செய்யக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது என்று ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ஜெயலலிதாவின் படத்திற்கு சட்டமன்றத்தில் பார்க்கும் போது நினைவுக்கு வரவேண்டும். காவல் நிலையத்தில் குற்றவாளி படம் வைத்து இருப்பது போல்தான் இதுவும் என்று அதில் கூறி உள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks