சென்னை: சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அவர் தனது உரையில் குறிப்புணர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் தமிழரே அல்லாத நிலையில், தமிழ்நாட்டை ஆள நினைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தான் 44 ஆண்டுகளாக தமிழகத்தில் இருப்பதால் பச்சைத் தமிழன்தான் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச கருத்து குறித்து கமலும் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ட்விட்டரில் குழப்பவாதி சண்டியராக வலம் வரும் கமல்ஹாசனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. “தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். அரசியல் என்பது சேவை தொடர்புடையது. சம்பாதிக்கும் தொழில் இல்லை. அரசியல்வாதிகளுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து எங்களுக்கு பணியாற்ற வாருங்கள் என்று சொல்ல வேண்டும். பதிலாக தியாகம் செய்ய வாருங்கள் என்றால் அதை அவர்கள் வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான் அரசியலுக்கு வர மாட்டேன். ஏனென்றால் சினிமாவில் சம்பாதிப்பதுடன் வேறு விஷயங்களும் கிடைக்கின்றன.

கவுதமி லிவிங் டு கெதர் மாதிரி. நான் வாக்களிப்பவன் மட்டுமே. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கருத்தில் தவறுமில்லை. நான் 21 வயதில் இருந்து, ஓட்டுப் போட்ட நாளில் இருந்து அரசியல் உள்ளேன். ஆனால் போட்டி அரசியலுக்கு வரவில்ல என்று கூறிய கமல் ‘என் வாழ்க்கையிலிருந்து உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், என்னை பொறுத்தவரை, கேரள மக்கள் என்னை ஒரு மலையாளியாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் அம்பேத்கர் கெட்டப்பில் தோன்றுகிறீர்கள் என்ற கப்சா நிருபரின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “ரஜினி அம்பேத்கர் பற்றிய குறியீடுகளை தனது ‘காலா’ பட போஸ்டரில் வைத்துள்ளார், என் பங்குக்கு நான் சாதி அரசியல் செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்பேத்கர் கண்ணாடி, சபாரி சூட் அணிந்து நிகழ்ச்சியை வணங்குகிறேன்.

செய்தி அடிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். விஜய், அஜித் ரசிகர்களுக்குள் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறதோ, அதேபோல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் அந்தக் காலகட்ட பின்னணியில் சண்டைகளும், சர்ச்சைகளும் இருக்கவே செய்திருக்கிறது. அதுவே ரஜினிக்கும், எங்களது ரசிகர்களுக்கும் இடையே சண்டை வந்ததில்லை. எங்கள் குருநாதர் கே பாலசந்தர் சொன்னபடி நாங்கள் தனித்தனி பாதையை வகுத்துக் கொண்டு வெவ்வேறு பாணியில் ரசிகர்களை சுரண்டிக் கொண்டு கடந்த 35 ஆண்டுகளாக வயிற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். என்னிடமிருந்த பணமெல்லாம் ப்ராஸ்தெடிக் மேக்க்ப்புக்கே செலவாகி விட்டது. ரஜினி மக்களுக்கு ஒன்றும் செய்யத் தேவை இல்லை, தொண்டு செய்ய வேண்டும் என்ற உணர்வே போது. மக்களுக்கு அள்ளிக் கொடுக்க ரஜினியிடமும் ஒன்றும் இல்லை, அவர் ஏற்கனவே தன சொத்துக்களை, அருணாச்சலம், முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களில் மக்களுக்கு வழங்கி விட்டார்.” என்றார்.

பகிர்

There are no comments yet