புது டெல்லி:மத்திய அரசின் மூன்றாண்டு செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசு குறித்து இரண்டு கேள்விகளையும் மொபைல் செயலியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.

தனது தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘இந்த 3 ஆண்டுகளில் நாடு மிக வலுவான அடித்தளங்களில் காலடி எடுத்து வைத்துள்ளது, அந்த முயற்சிகள் மக்களின் வாழ்வை உயர்த்தியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு துறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார். மார்ச் 2014-ம் ஆண்டு அந்தத் துறை இருந்த நிலையோடு தற்போதைய நிலையை ஒப்பிட்டு புள்ளிவிவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கருத்துக்கணிப்பில் மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த குறிப்பு கூறுவதாக நம்பத்தகாத செய்திகள் கூறுகின்றன. இதையடுத்து நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது: என்னுடைய அரசு மாடுகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே அமைந்த அரசு. எங்களுக்கு வேறு யார் குறித்தும் கவலை இல்லை. மக்கள் எப்படியாவது தங்களை காப்பாற்றி கொள்வார்கள், அனால் மாடுகளை யார் பார்ப்பது அதனால் தான் நானும் என் காட்சியன்றும் மாடுகளுக்கான உயிரை கொடுக்கிறோம், மற்றவர்கள் உயிரையும் எடுக்கிறோம் என்றார்.

பகிர்

There are no comments yet