சென்னை: ரஜினிகாந்த் வரும் ஜூலை மாதம் இறுதியில், அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவிக்கையில், “ஜூலை மாதம் இறுதியில் ரஜினி அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தான் தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
அரசியலில் அமைப்பு சரியில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அதை மாற்றும் முனைப்புடன் களமிறங்குவார்.” என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி தற்போது கட்சியை தொடங்க சரியான தருணம் என ரஜினியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
20 வருடங்களாக அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என தெரியாமல் தவித்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர் அரசியலில் ஈடுபடுவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்களின் நம்பிக்கையை மெய்பிக்கும் வகையில் அவரது சகோதரர் ஜூலையில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தெரிவித்திருப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்தபோது, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது ஜூலையில் கட்சி தொடங்கவில்லை , தனக்கும், தன்னைப்போல் பழம் பெரும் நடிகர்களுக்கும் முதியோர் இல்லம் ஆரம்பிக்கிறார். ரஜினிக்கும், அரசியலுக்கும் ரெம்ப தூரம். இப்போது நண்பர்களாக இருப்பவர்கள் காலை வாரி விடுவார்கள். ஸ்டாலின், கருணாநிதியின் சூது அறிந்தவர், பாஜகவில் சேரவில்லை என்றால் ரெய்டு நடத்த மோடி ரெடியாக இருக்கிறார். எனவே இப்போது அமைதி காப்பதே நல்லது என்று அனைவரும் அவர்க்கு அறிவுரை சொல்லியுள்ளனர். அடுத்து எந்திரன் 2.0 வெளிவரும் போது மீண்டும் அரசியல் பேச்சை தொடர்வார் என்றனர்.
There are no comments yet
Or use one of these social networks