சென்னை: தனியார் பால் பாக்கெட்டுகளின் தரம் பற்றி சர்ச்சையை கிளப்பிய விவகாரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமைச்சருக்கு ‘கட்டிங்’ கிடைக்கததால் கண்டபடி பேசுவதாக குற்றம் சாட்டி உள்ளார். தனியார் பால் பாக்கெட்டுகளில் ரசாயனம் கலந்திருப்பதாக அரசின் ஆய்வு முடிவு தெரிவிப்பதாகவும், இல்லை என்று நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது புகாருக்கு தனியார் பால் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தன. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கேப்டன் விஜயகாந்த் குரல் கொடுத்துள்ளார். “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில், ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால் நிறுவனத்தில், தண்ணீர் கலப்படம் செய்து, குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் வழங்கி பல முறைகேடுகள் நடந்தன. அப்போதெல்லாம் வாய் பேசாமல் ஊமையாய் இருந்தாரே என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இப்போது திடீர் ஞானோதயம் வந்தவர் போல் அமைச்சர் பேசி இருப்பது, பால் நிறுவனங்களை மிரட்டி ‘கட்டிங்’ பெறுவதற்கன்றி வேறு ஒன்றுமில்லை” என்று பேட்டி அளித்துள்ள விஜயகாந்த், நமது கப்சா நிருபரிடம் கோயம்பேட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் வாசலில் லுங்கியுடன் பேட்டி அளித்தார்: “தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு சசிகலாவின் மிடாஸ் நிறுவனம் பிராந்தி, ரம், பீர் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனமாக டாஸ்மாக் இருந்தபோதும் கொள்முதல் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தது சசிகலா கோஷ்டிதானாம். “கட்டிங்” கிடைக்காவிட்டால் சின்னம்மாவின் சாராய ஆலைகளை மூடச்சொல்வதுதான் நியாயம். அதை விட்டுவிட்டு, பச்சைப் புள்ளைங்களின் பசியை போக்கும் தனியார் பால் நிறுவனங்களை மூடச்சொல்லும் அமைச்சார் ஒரு மூடர். இந்த லட்சணத்தில் மூடப்படும் டாஸ்மாக் ஆலைகளில் வேலை பார்ப்பவர்களை ரேசன் கடைகளில் வேலைக்கு சேர்க்கப் போகிறார்களாம். அங்கே போய் மண்ணெணை கேட்டால் ‘கூலிங் இல்லை’ என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விதிமுறைக்குட்பட்ட இடங்களை அதிகாரிகள் சாலைகளின் பெயர்களை மாற்றி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க முயன்றனர். ஆனால் பல இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் வந்ததால், எதிர்ப்பு வெடித்தது. கடைகளை சூறையாடியும் தீவைத்து கொளுத்தியும் பூட்டுப் போட்டும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்கள் எந்தக் கட்சியின் மகளிரணி என்று தெரியவில்லை. இந்த நிலையில் பாஜகவின் மூன்றாண்டு கால மொக்கை ஆட்சியின் மொக்கை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ‘இறைச்சிக்காக மாடு வெட்ட தடை’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கை தடை செய்ய சொல்லி இங்கே போராட்டம் பண்ணிக் கொண்டிருக்கையில் சைட் டிஷ்ஷை தடை செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார் விஜயகாந்த். இதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு ஆத்திரங்கள் வருது மக்களே, தூ..” என்று துப்பி முடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks