சென்னை: கடந்த 2016 டிசம்பர் 5 ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்புக்கும், ஜெயலலிதா விட்டுச்சென்ற சொத்துக்களுக்கும் அடிபிடி-குடுமிபிடி சண்டைகள் துவங்கி விட்டது. ஜெயலலிதா விட்டுச்சென்ற கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுக்கு இரு அணிகளாக பிரிந்து சின்னம்மா தரப்பும் ஓ.பி.எஸ் தரப்பும் அரசியல் அட்ராசிட்டிகளை அரங்கேற்றி வரும் நிலையில், ஜெயலலிதா விட்டுச்சென்ற ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பற்றிய மர்மங்களை மறக்கடிக்க, பல்வேறு உப்பு சப்பில்லாத பிரச்சினைகளை மத்திய அரசு கிளப்பி வருகிறது, அதற்கு உதாரணம் சமீபத்திய மாட்டு இறைச்சி தடை. தமிழன் சோற்றில் மண்ணை போட்டால், மற்ற எதையும் பற்றி சிந்திக்க மாட்டான் என்பதற்காகவே இத்தகைய பரப்புரைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. தற்போது சின்னம்மா சிறையில் இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது அவரது அடிமையான எடப்பாடி பழனிசாமி தான்.

இந்த சசிகலாவின் சாம்ராஜ்யம் மிகப் பெரியது. ஆகச்சிறந்த நடிகையான ஜெயலலிதாவையே தன் அற்புத நடிப்பால் ஏமாற்றி ஒருவித மயக்க நிலையிலேயே ஜெயலலிதாவை வைத்திருந்து அப்பல்லோவில் வைத்து பரலோகம் அனுப்பிய சின்னம்மாவின் கைவரிசைகள் அளப்பரியவை. சின்னம்மா சேர்த்த சொத்துக்கள் பற்றிய விபரத்தையும், மொத்த சொத்துக்கள் பற்றிய விபரத்தையும் தி வீக் வார இதழ் புலனாய்ந்து கண்டறிந்துள்ளது. ஏப்ரல் 23 2017 அன்று கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு எஸ்டேட்டில் இருந்த ஜெயலலிதாவின் விலை மதிப்புமிக்க வாட்சுகளும் நகைகளும் சொத்து ஆவணங்களும் திருடப்பட்டதாக செய்தி வெளியானது. 30 வருடங்களில் ஜெயலலிதாவும் அவரது பினாமிகளும் சேர்த்த 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பங்குபிரித்துக் கொள்வதில் பல கொலைகளும் ‘தன்’கவுண்டர்களும் ‘அசாதாரண’ விபத்துக்களூம் அரங்கேறின.

போயெஸ் கார்டன் வேதா இல்லத்தை ஜெயா நினைவிடமாக்க வேண்டும் என்று பிணத்தை வைத்து அரசியல் செய்யும் ஓ.பி.எஸ் கூறிவருகிறார். சொத்துக்கள் எங்களுக்கே என்று சசிகலாவின் மன்னார்குடி மாபியாவும், ரத்த சொந்தங்களான தீபா, தீபக் இருவரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில அமைப்புகள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த சொத்துக்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டன இதில் சசிகலாவின் பங்கு என்ன என்பன போன்ற தகவல்களை உங்கள் நியூஸ் புலனாய்வில் கப்சா நிருபர் தகுந்த ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளார்:

Credit: The Week

ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில், பல நிறுவனங்கள் துவங்கியது, சசி ஜெயா இடையேயான சதி திட்டத்தை நிரூபிப்பதாக உள்ளது. முதலில், ‘ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர் பிரைசஸ்’ நிறுவனங்களில், ஜெயலலிதா, சசிகலாவுக்கு தொடர்பு இருந்தது. அதன்பின், 21 நிறுவனங்கள் வரை துவங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் எதுவும், வர்த்தக நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை.ஒரே நாளில், ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட, 10 நிறுவனங்கள் துவங்கப்பட்டன. தி.நகரில் உள்ள ஒரு ஆளில்லாத பிளாட்டுகளில் இயங்குவதாக ஆவணங்கள் கூறுகின்றன. சசிகலாவும், சுதாகரனும் தனிப்பட்ட நிறுவனங்களை துவங்கியது மட்டுமல்லாமல், செயல்படாத நிறுவனங்களையும் வாங்கி உள்ளனர். இந்நிறுவனங்கள், சொத்துகளை வாங்கியதே தவிர, வேறு எந்த வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.சிறப்பு நீதிமன்றம், சாட்சியங்களை விரிவாக ஆராய்ந்து, வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததை உறுதி செய்துள்ளது. ஜெ., பெயரில், கணக்கில் காட்டப்படாத சொத்தின் மதிப்பு, 53.60 கோடி ரூபாய் என்பதை, சந்தேகத்துக்கு அப்பால், அரசு தரப்பு நிரூபித்து உள்ளது.

உதாரணத்துக்கு, மேலே கூறியுள்ளபடி பல கொலைகள் அரங்கேறிக் கொண்டுவரும் கொடநாடு எஸ்டேட் பற்றி வீக் இதழுக்கும், நியூஸ் மினிட் இணைய தளத்திற்கும் அதன் முன்னாள் அதிபரிடம் கொடுத்த பிரத்யேக பேட்டி: பீட்டர் கார்ல் எட்வர்டு கிரெய்க் ஜோன்ஸ் என்ற நான் லண்டனில் இருந்து 1976ல்ன் கொடநாடு வந்தேன். எனது தந்தை வில்லியம் ஜோன்ஸ் தேயிலை எஸ்டேட்டை 1970களில் வாங்கி இருந்தார். 1990களில் தேயிலை வியாபாரம் சூடு பிடிக்க நான் (ஜோன்ஸ்) கொடநாடு டீ எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். 1992 ஆண்டின் வாக்கில் தான் பிரச்சினை ஆரம்பமானது. அப்போது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா எஸ்டேட்டை வாங்க விரும்புபதாக தூது அனுப்பினார். எங்களுக்கு சில வங்கிகளில் கடன் இருந்ததால், எஸ்டேட்டின் ஒரு பகுதியை விற்க சம்மதித்தோம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் என் தந்தைக்கும் ஜெயலலிதாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அப்போது சசிகலாவும் செங்கோட்டையனும் தான் ஜெயலலிதாவிற்கு வலது கரமாக செயல்பட்டனர். 7.6 கோடி ரூபாய்க்கு எஸ்டேட்டை விற்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டோம். ஆரம்ப காலங்களில் நாங்கள் பேரத்திற்கு ஒத்து வராத போது, 150க்கும் மேற்பட்ட அடியாட்கள் நம்பர் பிளேட்டுகள் மறைக்கப்பட்ட கார்களில் வந்து எங்களை மிரட்டிச் செல்வார்கள். தனது நண்பரன கவர்னர் சென்னா ரெட்டியிடம் என் தந்தை போன் மூலம் இதை தெரிவித்த போது, போலீசில் புகார் கொடுக்க சொன்னார்கள். ஆனால் போலீஸ் எங்களை எங்கள் சொத்துக்களை விற்று விட்டு ஊரை காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தினார்கள். 1994இல் எஸ்டேட் ஜெயலலிதாவால் விற்பனை ‘ஆக்கப்பட்டது’ அதிலிருந்து சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு என்னுடைய சொத்தை திரும்பப் பெற முயற்சிப்பேன்” என்றார் ஜோன்ஸ் கண்ணீர் மல்க.

Credit: The Hindu

இது சாம்பிள் தான்.. ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படுத்திய சசி, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, குற்ற சதி என்கிற குற்றச்சாட்டை பொறுத்த வரை, இந்திய தண்டனை சட்டத்தில் கூறியுள்ள சாராம்சங்களை, சிறப்பு நீதிமன்றம் கவனித்துள்ளது. சொத்து சேர்க்கும் ஒரு மாபெரும் திட்டத்துடன் தான் வீடியோ கடையில் இருந்து போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்திருக்கிறார் சின்னம்மா என்பது அரசல் புரசலாக ஓரளவுக்கு முதலிலேயே எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் புத்திசாலி என்று அறிய பட்ட அம்மா என்ன காரணத்தினாலோ மிக நன்றாக சின்னம்மா விடம் ஏமாந்து விட்டார்.. அப்படி மாஸ்டர் பிளான் செய்து சின்னம்மா தன் குடும்பத்தின் பேராதரவுடன் சொத்து குவிக்கும் சதி திட்டங்களில் அவர்கள் துணையுடன் அம்மாவிடம் தொடர்ந்து மிக நன்றாக நடித்திருக்கிறார். ஒரு கைதேர்ந்த நடிகையிடமே இப்படி சின்னம்மா அபாரமாக நடித்து ஏமாற்றியதை என்னென்பது? குடும்பத்தாரை தன்னுடன் இருக்க வேண்டாம் என்று ஒதுக்கிய ஜெயலலிதா, சசிகலா மேல் ஏனோ தவறான நம்பிக்கை வைத்து விட்டார். அந்த மாதிரி சகுனி மூளையுடன் சசிகலா மற்றும் குடும்பம் திட்டமிட்டு அண்ணன் குடும்பத்தாரை பழைய வேலையாட்களை பழைய நல்ல நண்பிகளை நண்பர்களை அவரிடமிருந்து பிரித்தும் இருக்கிறார்கள். ஜெயலலிதா உஷாராக இருந்திருந்தால் சசிகலாவை வைக்க வேண்டிய இடத்தில் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்தால் அவர் பெயர் இப்படி இறந்த பின்பும் சீர்கெட்டு போயிருக்காது.” என்று கூறும் உங்கள் நியூஸ் கப்சா நிருபர், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள 1991 முதல் 1996 வரை வாங்கிய சொத்துக்கள் விபரத்தை கீழே தருகிறார்:

1. கொடநாடி எஸ்டேட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதிப்பு 1115 கோடி
2. வேதா நிலையம் 81, போயஸ் கார்டன் 1967ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவால் 1.32 லட்சம் வாங்கப்பட்டது. 24,000 சதுர அடி பரப்பு வீட்டின் இன்றைய மதிப்பு 90 கோடி
3. சிறுதாவூர் பங்களா 115 ஏக்கர் பரப்பளவு – தலித்துகளிடம் இருந்து வெத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி சசிகலா இளவரசி குரூப்பால் அபகரிக்கப்பட்டது.
4. பைய்யனூர் பங்களா 1.5 கோடிக்கு 1992ல் கங்கை அமரனை மிரட்டி வாங்கப்பட்டது இன்றைய மதிப்பு 75 கோடி
5. ஜீடிமெட்லா கிராமம் ரங்கா ரெட்டி டிஸ்ட்ரிக்ட் தெலுங்கானா (ஜே ஜே கார்டன்ஸ்) 14.5 கோடிக்கு வாங்கியது.
6. ராதிகா காலனி செகந்த்ராபாத் வீடு, சொத்து வரி 35,424 நிலுவையில் உள்ளது.
7. நமது எம்ஜியார் பத்திரகை ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷனஸ் மதிப்பு 22 கோடி
8. ரிவர்வே அக்ரோ புரொடக்டச்
9. மெடோ அக்ரோ பார்மஸ் 
10. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட்ஸ்
11. இந்தோ தோகா பார்மா
12. சிக்னொரா பிசினர் எண்டர்பிரைசஸ் 
13. ராமராஜ் அக்ரோ மில்ஸ் 
14. பல வங்கிகளில் பேங்க் பேலன்சாக 10.64 கோடி
15. ஜாஸ் சினிமாஸ் (முன்னதாக ஹாட் வீல்ஸ் எஞ்சினீரிங்)
16. மேவிஸ் சிட்காம்
17. ஜெயா டிவி
18. 21.280.3 கிராம்கள் தங்கம்
19. 1,250 கிலோ கிராம் வெள்ளி
20. 2,140 பட்டுப் புடவைகள்
21. 750 ஜோடி காலணிகள்
22. 91 விலைமதிப்புள்ள வாட்ச்சுகள்
23. 500 கிரிஸ்டல் கிளாஸ் 
24. ஸ்ரீ ஹரி சந்தனா எஸ்டேட்ஸ் 
25. அவிரி பிராப்பர்டீஸ் 
26. க்யூரியோ ஆட்டோ மார்க்
27. பேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ் 
28. மாருதி டிரான்ஸ்போர்ட்ஸ்
29. ரெயின்போ ஏர்
30. காட்டேஜ் ஃபீல்டு ரெசார்ட்
31. கஜானா ஃபின்வெஸ்ட்
32. எ வேர்ல்டு ராக்
33. சடியட் பைனான்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 
34. ஆவிக்னா அக்ரோ
35. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் 
36. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ்

There are no comments yet