மும்பை : மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளார்கள். ‘காலா’ படத்தில் ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்து வருகிறார். மும்பையில் தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ரஜினியின் காலா படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகேந்திரா ஜீப்பில் உக்கார்ந்து இருப்பதுபோல் வெளியானது. காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அமர்ந்த ஜீப்பை எங்கள் மகிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க ஆசைப்படுகிறோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தை ட்விட்டரில் போட்டு, ‘தலைவர் உபயோகித்த இந்த ஜீப் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். அதை வாங்கி எங்கள் நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்க விருப்பப் படுகிறோம்’ என்று கூறியிருந்தார். மகிந்திரா நிறுவனம் இதனை தங்களின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்த ஆசைப்படுகிறது. நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா நேற்றே இதுகுறித்து ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் ‘ஜீப்பை ரஜினி அமரும் அரியாசனமாகப் பயன்படுத்தியதில் அதுவும் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனும் பெரும் ஆளுமை ஒரு காரை சிம்மாசனம் போல் பயன்படுத்தும்போது அந்த காரும் வரலாற்றுச் சின்னமாகிவிடுகிறது. நிறுவனர் ஆனந்த் மகேந்திரா. ஜீப் உற்பத்தியில் மகேந்திரா நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. படத்தில் உபயோகிக்கப்படும் இந்த மாடல் ஜீப் தற்போது உற்பத்தியில் இல்லை. ரஜினி நடித்த ஜீப் என்பதால் அதற்கு தனி அந்தஸ்து கொடுத்து நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்கப் போவதாக, நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதைப் பார்த்த காலா படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் தனுஷ், “மிக்க நன்றி சார், தற்போது அந்த ஜீப்பை படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஜீப்பை உங்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்கிறோம்,” என்று பதில் கூறியுள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவரின் இக்கருத்தால், அவருடைய ட்விட்டர் தளம், ட்விட்டரில் ட்ரெண்ட்டானது. ஆனால், செயல் தலைவரின் கருத்துக்கு படக்குழுவினர் பதிலளிக்காமல் இருந்தனர். முதன் முறையாக தயாரிப்பாளர் தனுஷ் மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவரின் கருத்தை மேற்கோள் காட்டி, “மிக்க நன்றி சார்!!! அந்த வாகனம் தற்போது சூப்பர்ஸ்டாரால் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிம் உறுதியாக கொண்டு சேர்க்கப்படும்” என்று பதிலளித்துள்ளார். சமீபத்தில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஒரு டப்பா காரை வைத்திருந்த சொப்பனசுந்தரியை யாரு வச்சிருக்கா என்று கேட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் அடிவாங்கும் காட்சியை டிவியில் பார்த்தேன், தற்போது வெளியான சென்னை 28 படத்திலும் “சொப்பனசுந்தரி உன்ன யாரு வச்சிருக்கா” என்ற பாடல் வந்து பிரபலமாகியது. கபாலி படத்திற்கு தயாரிப்பாளரான தானு ஏரோப்ளேனில் விளம்பரம் செய்தார், நான் சொந்தக் காசை போட்டு படமெடுப்பதால் சீப்பான ஐடியா தோன்றியது, என் மாமாவின் நண்பரான ஆனந்த் மகிந்த்ராவிடம் ஏற்கனவே விளம்பர அக்ரிமெண்ட் போட்டபடி அதற்காக ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ‘வச்சு செய்யும்’ இந்த ‘தார்’ ஜீப்பை சீப் ரேட்டுக்கு புதுப்பேட்டையில் வாங்கினேன், நல்ல ரேட்டுக்கு மகிந்த்ரா நிறுவனத்துகு விற்க ஒர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியால் மகேந்திரா ஜீப்புக்கு இலவச விளம்பரம் கிடைக்கும், பட்த்துக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கும்.

காலாவுக்கு பிறகு காலாவதியான என் மாமாவை நானும் கலகலத்த ஜீப்பை ஆனந்த் மகிந்த்ராவும் வச்சிருப்பாங்க” என்றார், தொடர்ந்தவர், படத்தில் நடிக்கும் ஹூமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் ஒத்துக் கொண்டால் அவர்களையும் ஆனந்த் மஹிந்த்ரா சாருக்கு என் மாமா ஷூட்டிங் முடிந்த பிறகு தருவார்.” என்று கிளுகிளுப்பாக கூறினார். தனுஷுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “அற்புதம்.அல்லது வுண்டர்பார் என்றும் சொல்லலாம். உங்கள் பதிலுக்கு நன்றி தனுஷ். உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்” என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

பகிர்

There are no comments yet