சென்னை: ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அத்துடன் அவர் சட்டமன்ற உறுப்பினராகி 60 முடிவடைவதால் பிறந்தநாளுடன் வைர விழாவும் திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்பதால் தேசிய அரசியலில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து 2009 லோக்சபா கட்சிகள் விஜயகாந்தை வட்ட மடித்தன. அப்போது தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் தர சம்மதித்தது திமுக. இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் 8 எம்பி-க்கள், 2 அமைச்சர்கள் நிச்சயம் என சில நிர்வாகிகள் சொன்னபோது, யாரோ ரெண்டு பேரை அமைச்சராக்குவதற்காக எனது முதல்வர் கனவை முடக்கணுமா? என்று கோபப்பட்ட விஜயகாந்த் தனித்து களமிறங்கினார். அப்போது கருணாநிதி விஜயகாந்துக்காக காத்திருந்து, “பழம் நழுவிப் பாலில் விழும்” என்று கூறிவந்தார். அடுத்து நடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
தொடர்ந்து 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. பின்னர் 2016 சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது தேமுதிக. ஆனால் தொடர்ந்து திமுக மீதும் கருணாநிதி மீதும் கடுமையாக சாடிவந்தார் விஜயகாந்த். ஏனேனில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இருந்த விஜயகாந்தின் ஆண்டாள் – அழகர் திருமணம் மண்டபம் இடிக்க திமுக தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டிய விஜயகாந்த், கருணாநிதியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது தேமுதிக. ஆனால் தொடர்ந்து திமுக மீதும் கருணாநிதி மீதும் கடுமையாக சாடிவந்தார் விஜயகாந்த். ஏனேனில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இருந்த விஜயகாந்தின் ஆண்டாள் – அழகர் திருமணம் மண்டபம் இடிக்க திமுக தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டிய விஜயகாந்த், கருணாநிதியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.
தற்போது அரசியல் அனாதையாக வீட்டில் சரக்கு அடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், கடைசி கந்தாயாமாக கருணாநிதிய நாடி வந்ததாக தெரிகிறது. விஜயகாந்த் கப்சா நிருபரிடம் கூறியதாவது. “வேறெந்த அரசியல்வாதியும் செய்யாத சாதனையை தமிழீன தலைவர் இந்தியாவின் பழுத்த பலாவான ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி செய்துள்ளார். ஊழலுக்கு ஒரு அகராதி உண்டென்றால் அது கருணாநிதி தான். சின்னம்மா போல் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞான ஊழல் புரிந்த கருணாநிதியிடம் ஊழலில் பால பாடம் படிக்கலாம் என்று வந்தேன். முன்பு நான் மட்டுமே (விஜய)காந்தாக இருந்தேன், ஆனால் தமிழகத்தில் வெற்றிடத்தை சாதகமாக்கிகொண்டு இன்னொரு ‘காந்தாக’ ரஜினி களமிறங்கப் போகிறார் என்று பதற்றமாக உள்ளது. சினிமாவில் டைரக்டர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களை ஒப்பித்து நடித்து புரட்சிக் ‘கலைஞர்’ பட்டத்துடன் வலம் வந்த நான் மேடைகலில் புரட்டுக் கலைஞராக ஆண்டாண்டு காலம் வலம் வந்து தமிழகத்தை சுரண்டிய ஊழல் தாதாவை வாழ்த்த வயதில்லை. என்னை “ஓய்ஞ்சு போன” வாழைப்பழம் என்று சொன்ன தலைவரை பாலில் அபிஷேகம் செய்திருப்பேன் ரசாயனம் கலந்திருப்பதால் ஒவ்வாமை வந்துவிடும் என்பதால், காலில் விழுந்து வணங்கிவிட்டு வந்தேன்.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks