சென்னை: வருகிற 2017 ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் நடிகர் கமல் கூறியுள்ளார்.

தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரைத்துறைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசிய கமல்ஹாசன், “சினிமா சூதாட்டம் போன்றது அல்ல, சினிமா என்பது கலை. ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது என்பது சரியானது கிடையாது என்றார். புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம். ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி மொழி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது கட்டுப்படியாகாத ஒன்றாகும். இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28% வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது? திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார் கமல் ஹாசன்.

மேலும் அவர் பேசுகையில், “28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை, நான் சினிமாவை விட்டு விலகினால் நம் பொருளாதாரம் சீர்கெட்டு போய்விடும். மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட போகிறார்கள் பாவம். நாட்டுல மும்மாரி பெய்யாது, தொழில் துறை வளர்ச்சி நசுங்கிரும், விவசாயம் பாதிக்கப்படும். தமிழகம் ஒரு தலைசிறந்த நிர்வாகியை, தியாகியை, விஞ்ஞானியை இழந்திரும். தமிழ்நாடு சாப்பாடு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் சினிமா இல்லாத தமிழகம், கமல் இல்லாத சினிமாவை தமிழ்நாடு தாங்காது.. இந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். மோடி அவர்களே இத்தகைய மோசமான சூழ்நிலையிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.” என்றார்.

இந்நிலையில் கமல் சினிமாவை விட்டு விலகுவதாக் அறிவித்திருப்பதை விஷால் தலைமையிலான நடிகர் சங்கம் தரப்பு வரவேற்றுள்ளது. விஷால் கப்சா நிருபரிடம் அளிட்த பேட்டி: “அனைத்து நடிகர்களும் கோடிகளில் சம்பளம் பெற்று ஆனாலும் பொய் கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்கிறோம். எங்களுக்கு வழங்கும் சலுகைகளில் பாதிக்க படுவது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்ப மக்களே. அது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதி தொழில் போல சினிமாவும் பாவப்பட்ட தொழில் தான்.. அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாமல் சினிமா இல்லை. அதே நேரத்தில் வரி விலக்குக்கு உட்பட்ட தொழிலும் அல்ல. கமல் எப்போது சினிமாவை விட்டு விலகுவதாக உத்தேசம்? ஏற்கனவே இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவேன் என்று உதார் காட்டியது நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.

புதுப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு நூற்றுக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொண்டு தியேட்டர் அதிபர்கள் கண்ணில் மண்ணை தூவ முயற்சித்தவர்தான் இந்த கமல். என்னை போன்ற முதல்வர் கனவுள்ள இளம் நடிகர்களை நம்பித்தான் தமிழ்நாடே இருக்கு. 60 வயசானா, வேலையிலிருந்து அரசோ, முதலாளியோ ஓய்வு கொடுத்து அனுப்பிருவாங்க. இதுல சினிமாகாரங்க மட்டும் என்ன, வானத்திலிருந்தா குதிச்சாங்க. போங்கையா வேலைய பாத்துகிட்டு. கமல் இப்படி வெட்டு ஒன்று துண்டு என்றுதான் பேசுவார். ‘பெட்’ ஒன்னு ‘சிட்டு’ ரெண்டு என வாழ்ந்து வருபவர். மருதநாயகம் எடுப்பதற்குள் பாகுபலி வெளிவந்துவிட்டது. ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற இணைய தளங்கள் வந்துவிட்டன, எல்லாவற்றிற்கும் மேலாக கமலுக்கு ரிட்டையர் ஆகும் வயது வந்துவிட்டது. ‘செயல் திறன்’ குறைந்ததால், கவுதமி லிவிங் டுகெதர் பிரேக்கப் ஆனதால் கமல் இப்போது ஒரிஜினல் ‘குணா’ கமலாக மாறிவிட்டார். அதனால் சினிமாவை விட்டு விலகுவதை நடிகர் சங்கம் ஒருமனதாக வரவேற்கிறோம்.: என்றார்.

பகிர்

There are no comments yet