சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைவந்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 95 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுக எம்எல்ஏக் கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதிமுகவில் 3 அணிகள் உருவாகியுள்ளதால், வரும் 14-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரெனெ தூக்கத்தில் இருந்து எழுந்த தீபா நமது கப்ஸா நிருபரிடம் அளித்த சிரிப்பு பெட்டியில் எடப்பாடி அரசுக்கு என் ஆதரவு உண்டு, அனால் அதை என் கணவர் மாதவனை கலந்து பேசித்தான் சொல்லமுடியும். எனது எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவளித்து அவரது அரசை காப்பாற்றுவார்கள். அதிமுகவில் இருக்கும் குழப்பங்களுக்கு மக்கள் தான் காரணம். நான் தூக்கத்தில் பேசவில்லை என்று மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தார்.
There are no comments yet
Or use one of these social networks