கோலாலம்பூர் / மலேசியா: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவே அவர் விமானத்தில் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்டது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையம் சென்றடைந்தார். மலேசிய குடிவரவு சோதனையில் “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே எங்களது குடிவரவு மேல் அதிகாரிகளைச் சந்தியுங்கள்” என்று கூறி அங்கே அழைத்துச் சென்றார்கள். அங்கு இருந்த உயர் அதிகாரிகள், ‘நீங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்’ என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டனர்.
‘இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள் உள்ளன’ என்று அதிகாரிகள் கூற, “இல்லை, நான் இந்தியக் குடிமகன்” என்று வைகோ கூறி பாஸ்போர்ட்டை காட்டிய போதிலும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. “மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றது. எனவே உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்று கூறி, வைகோவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டனர். இந்தத் தகவலைப் பேராசிரியர் ராமசாமிக்கு வைகோ தெரிவித்தார். அவரும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங்கும் எவ்வளவோ முயற்சித்தும் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. “துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. அவரை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று சொல்லி, குடிவரவு அலுவலகத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை உட்கார வைத்தனர். “நீங்கள் இந்த இடத்தை விட்டு எழுந்துபோகக் கூடாது. உங்கள் செயலாளர் அருணகிரிக்கு மலேசியா விசா உள்ளது. அவர் முதல் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரலாம்,” என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு வைகோ, “நான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை” என்று சொன்னார். அதிகாரிகள் திரும்பக் கூறியபோதும் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டார். இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேர்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் செய்து உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய தூதரகம் வெளியிடாத அறிக்கையில் கூறி இருப்பதாவது: சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் மலேசிய மக்களுக்கு போராடும் போலி டானாக வருவார் ரஜினி. இங்கு உள்ள போதைப்பொருள் விபசார கலாசாரத்திற்கு ஆதரவாக உள்ளவர்களை சுட்டு வீழ்த்தியும், மலேசிய தாதாக்களை கொல்வது போலவும் நடித்திருந்தார். நாங்கள் ஆபத்தானவர் பெயர் பட்டியலில் உள்ள் வைகோவை அதே போல் ஒரு மலேசிய டானாக உருவகித்து எங்கள் அன்னிய செலவாணி மற்றும் டூரிஸ்ட் வருவாயை வைகோ கெடுத்துவிடுவார் என்று நினைத்து கைது செய்துவிட்டோம். இவர் மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் என்றால், இந்தியாவுக்கு பேராபத்தானவர், பொதுமக்களுக்கு உள்ள ஒரு சந்தேகம் எங்களுக்கும் உண்டு, இவருக்கு அரசியல் நடத்துவதற்கு எங்கிருந்து நிதி உதவி வருகிறது? மற்ற கட்சிகளுக்கு பதவியில் இருந்தபோது / இருக்கும்போது சம்பாதித்த / சம்பாதிக்கும் லஞ்சப்பணம் உள்ளது. அல்லது அவ்வாறு சம்பாதித்த கட்சியின் தோழமையினால் கிடைக்கும் உதவி உண்டு. இவருக்கும் இவருடைய கட்சிக்கும் நிதி ஆதாரம் எப்படி? மலேசியாவுக்கு வர டிக்கெட் வாங்க பணம் கிடைத்தது எப்படி என பல வலுவான சந்தேகங்கள் உள்ளன. வைகோவே நான் ஈழ நாட்டின் குடிமகன் என்று எல்லாம் பொறுப்பில்லாமல் பேசினார், விடுதலை புலிகள் அமைப்பின் செயலாரை போல் நடந்து கொண்டு இந்திய நாட்டிற்கு எதிராகவே பல முறை வைகோ பேசியுள்ளார், அந்த வீடியோ பதிவுகள் எங்களிடம் உள்ளன. அவர் செய்த தவறான அரசியலின் பின் விளைவு இது.” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
There are no comments yet
Or use one of these social networks