மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும் மதுரையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த கோரிக்கையில் மத்திய அரசுக்க அழுத்தம் கொடுக்கும வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் முடிவிற்கு எதிராக தினகரன் ஆதரவு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்எல்ஏ போஸ் மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை அறிந்து, தமிழக அரசியலில் சூனியமாகிப் போன விஜயகாந்த் கேப்டன் ‘எய்ம்ஸ்’ என்ற சொல்லை கேள்விப்படாததாலும், டில்லி மருத்துவமனை பற்றி தெரியாததாலும் அமைச்சர்கள் ‘எய்ட்சுக்காக’ சண்டையிடுவது தமிழகத்திற்கே அவமானம் என்று தெரிவித்துள்ளார். நான் விரும்பும் ‘குடி’ கல்லீரலை மட்டும்தான் பாதிக்கும், ஆனால் இந்த எய்ட்ஸ் என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் உயிரையே பறித்து விடும். சினிமாத்துறையில் நான் ‘பாதுகாப்பாக’ செயல்பட்டதால் எய்ட்ஸ் என்னை தாக்க வில்லை. அதுபோல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எம்.எல்.ஏக்கள் மேற்கொள்ள வேண்டும். எய்ட்சுக்காக அமைச்சர்கள் சண்டையிடுவது தமிழகத்திற்கே அவமானம். எம்.எல்.ஏக்கள் இப்படி வேறு படம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களா? நீங்கள் ராஜினாமா செய்தால் யாருக்கு என்ன நஷ்டம்? சட்டசபையில் மறுதேர்தல் வந்தால், திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் முறியடித்து ‘தேமுதி’கவின் வெற்றி உறுதியாகிவிடும்.” என்று கப்சா நிருபரிடம் புளகாங்கிதப் பட்டார்.

பகிர்

There are no comments yet