சென்னை: மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்துக்காக அந்நாட்டுக்கு சென்ற வைகோவை, ஆபத்தானவர் என்று கூறி விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வைகோவை மலேசியாவிற்குள் அனுமதிக்காமல் இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப அனுப்பவும் மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் இந்நிலையில் இது குறித்து தன்னுடைய கருத்தினை வெளியிட்டுள்ள கேப்டன் விஜயகாந்த், நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: வைகோ ஆபத்தானவர் பட்டியலில் இருப்பது மலேசிய அரசுக்கு முன்பே தெரிந்து இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்த விஷயம் எனக்கு கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பே தெரிந்திருந்தால் எனது மானம், மரியாதை கொஞ்சமாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.
இப்படி தெரிந்தே என்னை படுகுழியில் தள்ள மலேசிய அரசுக்கு எப்படி மனது வந்தது என்று எனக்கு புரியவில்லை. எனக்கு தக்க நேரத்தில் சரியான தகவலை அளிக்காதது மிகப் பெரிய தவறு. என்னை இந்த அவமானத்திற்கு ஆளாக்கிய மலேசிய அதிகாரிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கேப்டன் தனக்கே உரித்தான கோப கண்களுடன் வானத்தை நோக்கி முறைக்க ஆரம்பித்தார்.
There are no comments yet
Or use one of these social networks