சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 10 நகரங்களில் ‘அம்மா பெட்ரோல் பங்க்’ அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மா குடிநீர், அம்மா உணவகங்கள், அம்மா பசுமை கடைகள், அம்மா மருந்தகங்கள் என ஜெயலலிதாவின் ‘அம்மா’ என்ற பெயர் பிராண்ட் அடிப்படையில் அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக புதிதாக அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும் என அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக அரசின், உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இத் தகவல் இடம் பிடித்துள்ளது. அதன்படி திருவாரூரின் சுந்தர கோட்டை, நாகை கோவில்பத்து, மதுரை கப்பலூர், சேலம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை இரும்பு தலை, வேலூர் அருகே வாணியம்பாடி, விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம், திருச்சி மணப்பாறை ஆகிய பத்து இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட உள்ளன. முதல்வர் தொகுதி, போக்குவரத்து அமைச்சர், உணவுத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் கவனிக்கத்தக்கது.

இந்த பெட்ரோல் பங்குகள் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம்-இந்திய ஆயில் கார்பொரேசன் ஆகியவற்றால் இணைந்து அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அம்மா பெட்ரோல் பங்குகளில் மாநில அரசின் வரியை நீக்கிவிட்டு மலிவு விலையில் பெட்ரோல், டீசல் வழங்கப்படுமா, அல்லது பிற பங்குகளின் விலை மதிப்பில்தான் இங்கும் சப்ளை செய்யப்படுமா என்பது குறித்த விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை. சென்னையில் கப்சா நிருபருக்கு அளித்த பேட்டியில் “வீரியமிக்க தொண்டன் விக்னேஷ் போல தம்பிகள் தீக்குளிக்க வசதியாக அரசு பெட்ரோல் பங்குகள் அமைத்த பழனிச்சாமிக்கு சீமான் நன்றி தெரிவித்தார். போராட்டத்தின் போது பஸ்களை எரிக்கவும் வெட்டிப்போட்ட மரங்கலை எரிக்கவும், அரசு பெட்ரோல் பங்குகள் அமைத்த பழனிச்சாமிக்கு ராமதாஸ் திருமா தனித்தனியே அளிக்காத பேட்டியில் நன்றி தெரிவித்துள்ளனர். பெட்ரோல் பங்க் டீலர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும்போது வாகன ஓட்டிகள் கஷ்டப்படுவதாகவும், துக்கடா கட்சிகள் வன்முறையில் பஸ்களை எரிக்க சிரமப்படுவதாகவும், தருமபுரி பஸ் மாணவிகள் எரிப்பு, கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து போன்ற அவசிய அரசியல் வரலாற்று நிகழ்வுகள் அற்றுபோய் விட்டதாகவும் அதை சமாளிக்கவே அரசு சார்பில் இப்படி பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது என கப்சா நிருபர் மேலும் கூறினார்.

பகிர்

There are no comments yet