சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தன்னுடைய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, தற்போது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ‘தெறிக்க’ விட்டுள்ளார். அவர் தனது வீட்டில் பால்கனியில் நின்றபடி அளித்த பேட்டி: எனது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுக ஜெ.தீபா அணி என்று மாறுகிறது. பிரதமரை சந்திக்க அணுமதி கேட்டுள்ளேன். அசப்பில் ஜெயலலிதா போலவே உள்ளதால் எனக்கு நிச்சயம் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. என் மீது குமுதம் போன்ற பத்திரிகைகளால் ‘சொப்பன சுந்தரி என்னை யாரு வச்சிருக்கா” என்பது போன்ற அவதூறு பரப்பப்படுகிறது. ‘குமுதம்’ என்றால் ‘தாமரை’ என்று அர்த்தம். நிச்சயம் அவர்கள் (பாஜக) வேலைதான் இது. ஆதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக ப்ராமணப்பத்திரம், மன்னிக்கவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் எங்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. தலைமை இல்லாமல் சிதறிக்கிடக்கும் அதிமுகவே எனது டார்கெட். தொண்டர்களின் பலம் தான் அவசியம். எம்.எல்.ஏக்கள் அவர்களிடம் இருக்கலாம், பொன்னம்பலம் பாஜகவில் இருக்கலாம், ஆனால் தொண்டர்களின் பலம் எங்களிடம் தான் உள்ளது.
போயஸ் கார்டனை மீட்டு வாடகைக்கு விடும் முயற்சிப் பணி நடந்து வருகிறது. மன்னார்குடி மாபியா என்னிடம் அந்த போயஸ் கார்டன் வீட்டை கொடுத்து தமிழகத்தை காப்பாற்றா விட்டால் இப்படித்தான் தினமும் காமெடி பேட்டி கொடுப்பேன். திமுகவின் திருமங்கலம் பார்முலா போல ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப்பிடிப்பேன். பர்சில் கொண்டுபோன கொஞ்சம் பணம் தீபக் என்னை அடித்தபோது பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு விட்டது.. குதிரை பேரம், குதிரை பேரம்” என்று தி .மு.க.வினர் கூச்சல் போடுகிறார்கள். ஆளுநருக்கு அளித்துள்ள மனுவில் கூட அப்படிதான் குறிப்பிட்டுள்ளார்கள். “குதிரை பேரம்” என்பது மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி தங்களது கட்சிக்கு ஆதரவாக இழுப்பது. ஜெயலலிதா அதிமுகவின் அச்சாணி. நான் அந்த இடத்தில் சின்ன குத்தூசி.. தங்களது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே பணம் கொடுத்தால் அது அன்பளிப்பு – அல்லது வெகுமானம், அல்லது லஞ்சம் – எப்படி வைத்துக் கொண்டாலும் அது அது குதிரை பேரம் இல்லை. அதனை ஒரு குற்றச்சாட்டாக கூறி ஆட்சியை எப்படிக் கலைக்க முடியும்? அதிமுக தான் தமிழகத்தை ஆட்சி செய்யும். ஆளுநரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசுவோம். நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்து விட ஆளுநரை வலியுறுத்துயுள்ளோம்,” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks