கோவை: உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.

தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்தார் நீதிபதி கர்ணன். கடந்த ஒரு மாதமாக கொல்கத்தா போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து வந்த நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை போலீசார் மூலம் கொல்கத்தா போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று கோவையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு தீவிரவாதியை கைது செய்வதைப் போன்று அவரை பின் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் ஒரு தலித்தான ராம் நாத் கோவிந்த்தை மிக உயர்ந்த இடத்தில் வைத்து நாடகம் ஆடுவதும், நீதிக்காக குரல் கொடுப்பவர்களை ஒரு பயங்கரவாதியைப் போன்று அவமதிப்பதும்தான் பாஜகவின் உண்மை முகம். இன்றைக்கு அது அம்பலப்பட்டுள்ளது. இது போலவே தலித் போராளி ராம்குமாரை கைது செய்து கரண்ட் கம்பியை கடிக்க விட்டு கொலை கொலை செய்தது போல் நீதியின் காவலர் தலித்துகளின் காவலன் கர்ணனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

பகிர்

There are no comments yet