சென்னை: எந்த பஞ்சாயத்து முடிந்தாலும் ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்து முடியாத கதையாக இருக்கும் தமிழ் சினிமாவில், தற்போது விஜய் புது சர்ச்சையை கிளப்பி உள்ளார். விஜய் அறிமுகமானதே ‘இளையதளபதி’ என்ற பட்டப் பெயருடன்தான். 90களின் ஆரம்பத்தில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரஜினியின் தளபதி. அந்தப் படம் வந்ததிலிருந்து ‘தளபதி’ என்றால் ரஜினிகாந்த் (அரசியல் உலகில் தளபதி யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை).

எனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் தன் மகன் பெயருக்கு முன் ‘இளையதளபதி’ என்ற பட்டப் பெயரைச் சேர்த்தார். அன்று முதல் ‘பைரவா’ வரை அவர் ‘இளையதளபதி என்றே அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் இதை குறிப்பிடாமல் தவிர்த்து வந்த மீடியா, இப்போது இளையதளபதி விஜய் என்றே எழுதுகிறது. தளபதி ஆனால் அந்தப் பட்டப் பெயரை இப்போது துறந்துவிட்டார் விஜய். இன்று முதல் அவர் தளபதி விஜய். அப்படித்தான் விஜய்யின் 61வது பட முதல் தோற்றப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இன்ப அதிர்ச்சி இன்ப அதிர்ச்சி தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் என்றே போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. புதிய பட்டம் புதிய பட்டம் இளையதளபதி என்ற பட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு புதிய பட்டத்தை விஜய்க்கு சூட்ட வேண்டும் என அவரது ரசிகர்கள் துடித்துக் கொண்டிருந்த நிலையில், ‘தளபதி’ பட்டத்தைச் சூட்டியுள்ளது மெர்சல் படக்குழு. ‘மெர்சல்’ என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, ‘இளையதளபதி’க்கு பதில் வெறும் ‘தளபதி’ என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

மெர்சல் என்ற தலைப்பின் எழுத்துக்கள் மாட்டின் கொம்பு மற்றும் வால்போல் உள்ளது என்றும், இளையதளபதி என்பது தளபதி ஆக புரமோஷன் பெற்றதையும் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கண்டுபிடிப்பாக இந்த படத்தின் டைட்டிலை தலைகீழாக வைத்து பார்த்தால் அதில் ‘விஜய்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் VIJAY என்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விஜய், மற்றும் அட்லி யோசித்தார்களா என்று தெரியவில்லை, ரசிகர்களின் கற்பனை எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீசான போது ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டப்பெயர் நடிகர் லாரன்சுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரியதாகி லாரன்ஸ் பின்வாங்கினார். ஆனால் அடுத்த ‘சிவலிங்கா’ படத்தில் ‘சின்ன கபாலி’ என்று ஆடிப்பாடினார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ‘இளைய சூப்பர்ஸ்டார்’ பட்டம் ‘வேலைக்காரன்’ படக்குழுவினரால் வழங்கப்பட்டது. சர்ச்சை கிளம்பியதால் சிவகார்த்திகேயன் பட்டம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். சிலம்பரசன் என்ற சிம்பு 6 வயதில் இருந்தே ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இப்படி இருக்க ஒரே கல்லில் ரெண்டு மாங்காயாக அதிகமா ஆசைப்படுற ஸ்டாலினையும், அதிகமா வாய்ஸ் மட்டும் கொடுக்கிற ரஜினியையும் கலாய்க்கும் விதமாக ‘தளபதி’ என்ற டைட்டிலை போட்டுக் கொண்டுள்ளார் விஜய். ‘மெர்சல்’ என்ற டைட்டில் மாட்டுக் கொம்பும் திமில் மற்றும் வால் ஆகியவை குறியீடாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு பிரச்சினை, மோடியின் மாட்டரசியல் ஆகியவற்றை விஜய் சீண்டுகிறாரா என்று கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

இதை அறிந்த முன்னள் துணை முதல்வர், இந்நாள் செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கப்சா நிருபர் தெரிவித்தார். ஸ்டாலின் கப்சா நிருபரிடம் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி என்பது போல் தளபதி என்றால் ஸ்டாலின் தான். சமீபத்தில் தான் எனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ‘இளைஞர் அணித்தலைவர்’ பதவியை உதறி விட்டு செயல் தலைவர் பதவியை என் தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கினேன். அதற்குள் இந்த விஜய் தனது இளைய தளபதி பட்டத்தில் இருந்து ‘இளைய’வை நீக்கியது என் தொண்டர்களிடம் கொந்தளிப்பை உண்டு பண்ணியுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ‘தலைவா’ என்ற படத்தில் அறிஞர் அண்ணாவிடம் இருந்து நேரடி பைப்லைன் போட்டு வந்தவர் போல் கதை அமைத்து, படம் எடுத்து. படாத பாடு பட்டு ரிலீசானதை மறந்துவிட்டாரா? என் தந்தை நலமுடன் இருந்தால் இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பாரா? விஜய்க்கு போட்டியாக உதயநிதி (சினிமா) களத்தில் இருக்கும் போது, என்னிடம் நேரடியாக மோதுவது போல் இப்படி செய்ய அந்த தம்பிக்கு வயது பத்தாது. அம்மா ஜெயலலிதா மறைவு, அப்பா கருணாநிதி உடல் நலமின்மைக்கு பிறகு முதல்வர் நாற்காலியில் அமர இருந்த எனக்கு பலமுனைப்போட்டி உருவாகி உள்ளது. தினகரன் தரப்புக்கு சிடி தயாரித்தது போல ரஜினி, விஜய், அஜித் சிம்பு ஆகியவர்களுக்கும் நித்யானந்த சிடி செய்தவர்களை வைத்து. தயாரிக்க சொல்லி ஐடி விங்கை முடுக்கிவிட்டுள்ளேன். சட்டசபையில் சட்டைக் கிழிப்பின் போது குறிப்பெடுத்த போலீஸ் படையினரை விஜய் வீட்டிற்கே சென்று முட்டிக்கு முட்டி தட்ட சொல்லி இருக்கிறேன்..” என்றார்.

பகிர்

There are no comments yet