பண்ருட்டி: பண்ருட்டியில் கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி நடந்து கொண்டதாக பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் விசாரணை நடத்தினர்.

இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.சபா.ராஜேந்திரன் சுபவீர பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்: கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக என் மீது வழக்கு போடப்பட்டது. இது எதிர்கட்சியினரை அலைக்கழிக்கவே போடப்பட்ட வழக்காகும்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் ஊதுகுழலாக அ.தி.மு.க.அரசு மாறிவிட்டது. பாரதீய ஜனதாவின் பினாமியாகவும் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக முதல்-அமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவும் எதிர்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ம.க.யாரை ஆதரிக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம். ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரிக்க போவதாக அ.தி.மு.க. தாமாகவே முன்வந்து அறிவித்துள்ளது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது.

ஆண்ட சாதி வன்னியர்களுக்கும் ஜனாதிபதி பதவியில் இட ஒதுக்கீடு வேண்டும். இதை பிரதமர் மோடியின், எதிர்க்கட்சி காங்கிரஸ் சோனியாவும் கன்சிடர் செய்ய வேண்டும். தலித்துகளுக்கு மட்டுமே ஜனாதிபதி பதவியை போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கின்றனர். அதில் வான்னியர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் சென்னை முதல் டெல்லி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரங்களையும் வெட்டி போராட்டம் செய்ய உள்ளோம் என்றார்.

There are no comments yet