சென்னை: பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க-வின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று ஒன்றுகூடி, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும், அ.தி.மு.க-வின் மற்றொரு அணியான ஓ.பன்னீர்செல்வத்திடம் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்ப்புகொண்டு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்பி., எம்எல்ஏ-க்களிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு அளிக்க முடிவுசெய்திருப்பதாகத் தெரிவித்தார். பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத், வேட்பு மனுத்தாக்கல்செய்ய உள்ள நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பழனிசாமி இருவரும் பங்கேற்றார்கள். அ.தி.மு.க-வில் மூன்றாவது அணியாக உருவாக்கியுள்ள டி.டி.வி.தினகரன் அணியின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் யாரை ஆதரிப்பாளர்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ., வெற்றிவேல், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி சசிகலா விரைவில் அறிவிப்பார், கட்சிப் பொறுப்பில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே முதல்வர் பழனிசாமி உள்ளார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தம்பிதுரை எம்பி நேரில் சந்தித்தார். எடப்பாடி அரசு தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் தம்பிதுரை சசிகலாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ‘தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது நீக்கியதுதான்’ என விடாப்பிடியாக உள்ளது. அதிமுக சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தொடர்பாகவும் டிடிவி தினகரனுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார். குயரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக தம்பிதுரை சசிகலாவுடன் சிறையில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தம்பிதுரை கப்சா நிருபரிடம் கூறியதாவது: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத்தை ஆதரிப்பது என்பது சசிகலா, முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு. ராம்நாத்துக்கான முதல்வர் ஆதரவு அ.தி.மு.க தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு ஆட்சி புரிய வேண்டிய சின்னம்மாவை சிறையில் சந்தித்ததும் கண்கலங்கி விட்டேன். எம்.ஜி.ஆர் உடன் அரசியல் செய்த நான் தரம் தாழ்ந்து, அசிங்கமான அரசியல் வியாபாரியாக மாறி, சிறைக்கைதி சின்னம்மாவிடம் கையேந்தும் நிலை, என்ன செய்வது. முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலாவை உள்ளடக்கியதுதான் அ.தி.மு.க தலைமை. என்று கூறுகிறார்கள். ஆனால் நான் என்னை முதல்வராக்குங்கள், ராம்நாத்தை ஆதரியுங்கள் நான் மோடியிடம் பேசி உங்களுக்கு தற்காலிக ஜாமின் வாங்கித் தருகிறேன். பிறகு அதை நிரந்தர ஜாமின் ஆக்கி விடலாம். என்று கெஞ்சிவிட்டு வந்தேன். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் ரெய்டு வரும் பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஊழலை வெளியில் சொல்லாமலே மறைத்து விடுவார்கள் பாஜக ஆசிர்வாதத்தோடு மீதி நான்கு ஆண்டுகளுக்கு நன்றாக சுருட்டலாம். சசிகலா , தினகரன் கைது , தலைமை செயலாளர் வீட்டு ரெய்டு, நத்தம் விஸ்வநாதன் , சேகர் ரெட்டி ரெய்டு மற்றும் சிறை, எடப்பாடி மீது வழக்கு , ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா – விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்று இவ்வளவு அல்லோகல்லப்பட்டும் அத்தனை பெரும் போட்டிபோட்டு ஆதரிப்பது என்ன கொள்கை முடிவா? நிச்சயம் இல்லை. பாஜக ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது .. அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கும் சோமாலியாவுக்கும் தான் போட்டி இருக்கும் – அ.தி.மு.க-வில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே இருக்கிறது” என்று கமல்ஹாசன் தொனியில் கூறினார்.

பகிர்

There are no comments yet