சென்னை: மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவி பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. 25 ஜூன் அன்று நிகழ்ச்சி துவங்கியது. இதில் கலந்து கொள்பவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது போட்டியாளர்கள் யார் என்பது தெரிந்து விட்டது. அதன் விபரம் வருமாறு: ’வழக்கு எண்’, ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, ‘எஸ்.எம்.எஸ்’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்த அனுயா, காமெடி நடிகர் வையாபுரி, நடிகையும் நடன இயக்குநருமான காயத்திரி ரகுராம், ‘நாடோடிகள்’ பட புகழ் பரணி, மாடல் அழகி ரைய்சா, கவிஞரும் நடிகருமான சினேகன், நடிகை ஓவியா, நடிகை ஆர்த்தி கணேஷ், ஆரவ் என்ற புதுமுகம், நடிகர் கஞ்சா கருப்பு, ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலி, நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நடிகர் சக்தி வாசு ஆகிய 14 போட்டியாளர்களுடன், 15 வதாக நமீதாவும் இணைந்துள்ளார். முன்னதாக, 14 போட்டியாளர்கள் என்று விளம்பரப்படுத்தி வந்த விஜய் டிவி, நேற்று சஸ்பென்ஸ் போட்டியாளராக நமீதாவை 15 வது போட்டியாளராக அறிமுகம் செய்தது. இதனால் ரசிக மச்சான்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

முன்னதாக சமூக வலைத்தளங்களில் இந்த பட்டியல் போல் ஒரு பட்டியல் உலா வந்தது. அதில் அரசியல் பிரமுகர்கள் நாஞ்சில் சம்பத், ஹெச். ராஜா மற்றும் நடிகை அமலா பால் ஆகியோரது பெயர் இருந்தது. ஆனால் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களை இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவி தரப்பில் அணுகி எந்த ஏற்படும் செய்யவில்லையாம். ஹெச். ராஜா நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய அரசியல் பிரமுகர்கள், நாள் தோறும் கூட்டங்கள் விவாதங்கள் அரசு நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருப்பவர்கள், அமலா பால் பிசியாக படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர். இவர்களை அணுகி இருந்தாலும் ஒத்துக்கொண்டு இருப்பார்களா என்பது சந்தேகமே.

இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்த மோடி கப்ஸா நிருபரிடம் ஸ்கைப் சாட்டிங்கில் கூறியதாவது: “கூவத்தூரில் எம் எல் ஏக்களை அடைத்து வைத்ததை பிக் பாஸ் நிகழ்ச்சி நினைவு படுத்துகிறது. சின்னம்மா, கட்சி எம் எல் ஏக்களை எப்படி அடைத்து வைத்து ஒற்றுமையாக வழிநடத்தி ஆட்சியை தக்க வைத்தாரோ அது போல கமல் பதினைந்து போட்டியாளர்களை கட்டி அடைத்து வைத்து விளம்பர வருமானம் மூலம் பணம் பண்ணுகிறார். தற்போது மூன்று அணிகளாக உள்ள அதிமுகவிடம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. எனவே ஓ பி எஸ், பழனிசாமி, தினகரன் மூவரும் கமல் தலைமையில் பிக் பாஸ் வீட்டிற்கு குடி புகுந்து நூறு நாட்கள் ஒண்ணாடி மண்ணடியாக புழங்கி ஊழல் செய்வதில் ஒற்றுமையாக இருப்பது போல் ஒன்றாய் தட்டில் சாப்பிட்டு ஒன்றாய் படுக்கையில் படுத்து உறங்கி நட்புறவை வளர்த்துக்கொண்டு அதிமுகவை ஒன்றிணைத்து, தமிழகத்தில் பாஜக காலூன்ற உதவி புரிய வேண்டும், இல்லாவிட்டால் பருவ மழை தொடங்கும் முன் தமிழ்நாட்டில் மீண்டும் ரெய்டு மழை வரும்.” என்றார்.

பகிர்

There are no comments yet