சென்னை: சிறுதாவூரில் உள்ள ஜெயலலிதாவின் பங்களா அருகில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அந்த பங்களாவில், அவரது தோழி சசிகலாவுடன் சென்று தங்குவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அந்த பங்களாவுக்கு யாரும் செல்வதில்லை. இதனால் இங்கு என்ன இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதே மர்மமாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம், சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், மேலும் பரபரப்பு நிலவியது.

இதேபோல் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த கோடநாடு எஸ்டேட் பங்களா பாதுகாப்பில் ஈடுபட்ட காவலாளி கடந்த 2 மாதத்துக்கு முன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 8 பேர் வரை கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளியோ, கொலை மற்றும் கொள்ளைக்கான காரணம் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவை ஒட்டி தனியாருக்கு சொந்தமான லேஅவுட் உள்ளது. இந்த மனை பிரிவையொட்டி எலும்பு கூடுகள் இருப்பதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: இப்போதெல்லாம் அம்மாவின் ஆன்மா ஓபிஎஸ் அண்ணன் கனவில் வருவதில்லை, அதனால் கோபமாக ஆன்மாவை அண்ணன் சபித்து விட்டார். அதனால் அம்மாவின் ஆவியை கொடநாடு எலும்பு கூடுவில் ஏவி விட்டு கூடு விட்டு கூடு பாயுமாறு மோடி மஸ்தான் வேலை செய்துள்ளார் என்று ரகசியத்தை கூறினார்.

There are no comments yet