குட்கா வியாபாரியிடம் 40 கோடி தீபாவளி போனஸ் வாங்கிய ஓபிஎஸ் – கப்பம் கட்டாததால் ஆதாரத்துடன் காட்டிக்கொடுத்த அம்மாவின் ஆன்மா

906

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு போலீஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன் கூட்டி தகவல் தெரிவித்த டிஜிபி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மற்றொரு போலீஸ் அதிகாரி நெல்லைக்கு தூக்கியடிக்கப்பட்டார். சென்னை மாதவரத்தில் உள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கவுன்சிலர்கள் முதல் அமைச்சர் வரையும், உதவி கமிஷனர் முதல் 2 டிஜிபிக்கள் வரையும் லஞ்சம் வாங்கிய தகவல்கள் 6 மாதத்திற்கு முன்பு வெளியாகின. அப்போது டிஜிபியாக இருந்த அசோக்குமார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு விரிவான அறிக்கை அனுப்பினார்.

அந்த அறிக்கையில் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ், திரிபாதி, டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவி வகித்த காலக்கட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதித்துள்ளனர் என்று கூறியுள்ளதோடு, ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் குறித்து அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் விசாரிக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால் அசோக்குமார் டிஜிபியாக இருந்த காலகட்டத்தில், அவர் நேரடியாக ஜெயலலிதாவை சந்தித்து வந்தார். இதனால் அப்போது முதல்வரின் ஆலோசகர்களாக இருந்த 2 ஓய்வு பெற்ற அதிகாரிகள், முதல்வரின் செயலாளர் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்தனர்.

Credit: The Hindu
Credit: The Hindu

அந்த அறிக்கையில், வருமான வரித்துறையினர் ஒரு ஆதாரம் கிடைத்தால் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுத மாட்டார்கள். டெல்லியில் உள்ள வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்துக்குத்தான் எழுதுவார்கள். அவர்கள்தான் மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதுவார்கள். ஆனால் தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளருக்கும் டிஜிபி அசோக்குமாருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அசோக்குமார் சிபிஐயில் இருந்தவர். அவருக்கு கீழ் இணை இயக்குநராக இருந்தவர்தான் அருணாச்சலம். அவர் தற்போது மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ளார். அசோக்குமார் உத்தரவுப்படி அருணாச்சலம்தான் வருமான வரித்துறையின் அலுவலகம் சென்று, வற்புறுத்தி குறிப்பிட்ட ஒரு அதிகாரிக்கு எதிராக அறிக்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதைப் படித்ததும் என் அரசின் அதிகாரிக்கு எதிராகவே ஒரு போலீஸ் அதிகாரி செயல்படுகிறாரா என்று கோபமான ஜெயலலிதா, அசோக்குமாரை உடனடியாக பதவி விலக உத்தரவிட்டார். இதனால் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே உத்தரவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த அருணாச்சலம், நெல்லை போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார். தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன், டிஜிபியாகவும், ஜார்ஜ், போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டனர். இப்போது அசோக்குமார் அறிக்கை உண்மையாகி, ஜெயலலிதா நியமித்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது தற்போது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளது

இது குறித்து குட்கா விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி விவரமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அது வருமாறு: சென்னையில் உள்ள எம்டிஎம் குட்கா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமானவரித் துறையிடம் ஊழல் தடுப்பு பிரிவினர் கேட்டிருந்தனர். அதன்படி, ஆவணங்களை வருமான வரித்துறையினர் அளித்திருந்தனர். கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி வருமான வரித் துறையினர் நடத் திய சோதனையின்போது கைப்பற்றப் பட்ட ஆவணங்களில், குட்கா விற் பனையை அனுமதிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

குட்கா உற்பத்தி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான மாதவராவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மாநில அரசோடு தொடர்புடைய பல் வேறு நபர்களுக்கு பணம் செலுத் தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவ்வாறு பணம் பெற்றவர்களிடம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் இதுவரை விசாரணை நடத்தவில்லை. மேலும், வருமான வரித்துறை துணை இயக்குநர் (புலனாய்வு) கண்ணன் நாராயணன், மாதவ ராவிடம் பெற்ற வாக்குமூலத்தில், சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர் ஒருவர், சென்னை மாநகராட்சி அதி காரிகள் ஆகியோருக்கு பணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள் ளார்.

மேலும் இதற்கு முன்னர் சென்னை மாநகர காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், செங்குன் றம் உதவி ஆணையர் ஆகிய பொறுப் புகளில் இருந்தவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக வும் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் கூறும்போது, ‘‘வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வருக்கு அப்போதைய டிஜிபி அனுப்பியுள்ளார். அந்த ஆவணங்கள் அரசின் நடவடிக்கைக் காக நிலுவையில் உள்ளன. கடந்த 2015-16-ம் ஆண்டில் தீபாவளி போனஸ், கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் மாதம்தோறும் செலுத்தப்படும் தொகை என மொத்தம் ரூ.40 கோடி வழங்கியுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் விபரமறிய ஜெயாவின் ஆன்மாவிடம் இலையில் மை வைத்து நமது கப்ஸா நிருபர் எடுத்த பெட்டியில் ஜெயா கூறியதாவது: எனக்கு கப்பம் கட்டாமல் எந்த அமைச்சர் எப்படி அடித்தார்கள் என்ற விபரம் மேலேயிருந்து பார்க்கும் போது தான் தெரிகிறது. அதனால் ஒரு குறி காட்டியிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு ஆளாக மாட்டிவிடுவேன் என்று கூறினார். இதனால் எல்லா அமைச்சர்களும் கிலியில் இருப்பதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet