சென்னை: அடுத்த ஒரு மாதத்தில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக அறிவித்தால் என்று பாஜக தலைமை அறிவித்தால் அதையேற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பாமக ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி டெல்லியிலும், மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும்படி அக்கட்சித் தலைவர்கள் கோரினர். இதுகுறித்து பற்றி பாமகவின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் விவாதித்து தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

1991- ஆம் ஆண்டு முதல் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்நாடுதான் திகழ்கிறது என்றாலும், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுப்பதோ, இழந்த உரிமைகளை மீட்பதோ சாத்தியம் ஆகவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக திகழ்ந்த அதிமுகவும், திமுகவும் தமிழகத்தின் நலனை விட தங்களின் நலனை முக்கியமாகக் கருதி சுயநலத்துடன் செயல்பட்டது தான்.

ஆனால் பாமக மட்டுமே குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது. அனால் சுயநல திமுக அரசுகளை அரசியல் காழ்ப்பின் காரணமாக அன்புமணி மெடிக்கல் காலேஜ் ஊழல் செய்து பதவியை துறந்தார்.

இத்தகைய சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாரதிய ஜனதா தலைமை அறிவித்தால் அதையேற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பாமக ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

There are no comments yet