சென்னை: உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது. முதல்கட்டமாக யாத்திரீகர்கள் செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது.

விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்’ என்று குறிப்பிட்டு ஆதித்யநாத் இந்த உத்தரவை விதித்துள்ளார். மேலும், யாத்திரையின் போது மோசமான வார்த்தைகள் நிறைந்த பாடல்களையும் கேட்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தனது தைலா புர தோட்டத்தில் தலைவலி தைலம் தேய்த்து படுத்திருந்த பாமக தலைவர் ராமதாஸ் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அத்தி மரங்களை வெட்டச்சொன்ன உபி முதல்வரை பாராட்டுகிறேன். என்னைக்கேட்டால் அத்தி மரம் மட்டுமன்றி மரங்களையும் வெட்ட வேண்டும். மரங்கள் இருந்து பக்தர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய தடையாக இருக்கின்றன. இந்த மாதிரி தைரியமாக மரங்களை வெட்டச் சொன்ன உபி முதல்வர் ஆதித்யநாத் ஒரு பழைய பாமக உறுப்பினர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அடுத்த வாரம் அவரை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவிக்க நானும் அன்புமணியும் மேலே செல்கிறோம் என்றார். ஏன் மேலே செல்கிறீர்கள் என்று நமது நிருபர் கேட்டதற்கு ‘UP’ என்றால் ‘மேல்’ என்று தானே அர்த்தம் என்று கூறி நமது நிருபர் மீதும் கோடாலியை குறி வைக்க எடுத்தவுடன், நிருபர் தப்பித்தோம் பிழைத்த்தோம் என்று ஓடினார்.

There are no comments yet