சென்னை: ஜூலை 1ஆம் தேதி முதல் மொத நாட்டிற்கும் முழுமையாக ‘ஜிஎஸ்டி’ முறையில் வரி விதிக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்துள்ளது. சென்ற முறை பண மதிப்பிழப்பு நடவடிக்கை போது முந்திக்கொண்டு ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். இந்த நாட்டில் என்ன பிரச்சினை என்றாலும் ரஜினி என்ன சொன்னார்? என்று தான் அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஜிஎஸ்டி பற்றி கமல் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

ஆனால் ரஜினி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. மற்ற பொதுப் பிரச்சினைகளுக்காக கூட ரஜினிகாந்த் வாயைத் திறக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பி திரையுலகம் சார்ந்த பிரச்சினை தான். தமிழ்த்திரை உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும் ரஜினிகாந்த இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. தான் சார்ந்த துறையைப் பற்றியே வாய் திறக்காதவர், மக்களுக்காக என்ன குரல் கொடுக்கப் போகிறார் என்று கேள்வி எழுகிறது.

‘காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த ரஜினி அங்கிருந்தபடியே அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஷங்கரின் 2.0, பா.ரஞ்சித் இயக்கும் காலா என சினிமாவில் மட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ரஜினி.

ஜிஎஸ்டி விவகாரம் குறித்து ரஜினி அமெரிக்காவில் கப்சா நிருபரிடம் அளித்த பேட்டி: “அடுத்த படம் வரும்போது கண்டிப்பாக குரல் கொடுப்பேன், அதுவரை மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். எனது பாடி சிஸ்டம் சரி செய்து கொள்ள அமெரிக்கா வந்தேன், கூடவே தமிழகத்திலும் இந்தியாவிலும் கெட்டுக் கிடக்கும் ‘சிஸ்டத்தை’ சரி செய்வது குறித்தும், ஜிஎஸ்டி சாதக பாதகங்கள் குறித்தும், அதிபர் டிரம்புடன் விவாதித்தேன். அடுத்த படம் வரும்போது அதை கூறுவேன். கத்துறவனெல்லம் கத்தி முடிச்சு பிரச்சனை எல்லாம் சரியான விதத்தில் முடிந்ததும், வந்து கருத்து சொல்றேன், என்ன அவசரம்? போர் வரும் வரை பொறுத்திருங்கள். 44 வருடங்களாக சம்பாதித்தது பத்தவில்லை, இன்னும் 1000 – 2000 கோடி சேர்த்துவிட்டு ஈசி சேரில் உட்காரும் காலத்தில் நேராக CM சேரில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்காக வாழ்ந்து கடைசி காலத்தைக் கழிப்பேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet