சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.

ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்தார். இங்கு இவருக்கு மதியம் 12.30 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணில் சில இடர்பாடுகள் இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் அவர் முழு நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

கண் சிகிச்சை காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இதனால் சட்டசபையில் குட்கா, பான்மசாலா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வழக்கம் போல் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து ஸ்டாலின் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: வயதாகி விட்டதால் சரியாக கண் தெரியவில்லை.மேலும் மீட்டிங்குகளிலும், சட்டசபையிலும் துண்டுச் சீட்டில் பொடி எழுத்துக்களில் எழுதி படிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே டாக்டர்கள் எனக்கு கண்ணில் லென்ஸ் பொருத்தினர். இப்போது சிரமமில்லாமல் துண்டுச் சீட்டுகளை படிக்க முடிகிறது என்றார்.

பகிர்

There are no comments yet