கதிராமங்கலத்தில் கல் வீசியவர்கள் ஐசிஸ் தீவிரவாதிகளா? – விசாரணைக்கு எடுபிடி பழனிசாமி உத்திரவு

108

சென்னை: கதிராமங்கலத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று தி.மு.க. கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் 1.6.2001 முதல் வழங்கப்பட்ட சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில், தனியார் சிலருக்குச் சொந்தமான நிலத்தை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் குத்தகைக்கு எடுத்து, கச்சா எண்ணெய் எடுத்துவருகிறது. இதுநாள் வரையில், இந்த இடத்தில் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் பணிகள் நடைபெற்றுவந்தன. இதற்கிடையே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், கடந்த 18.5.2017 அன்று முதல் மேற்படி ஆழ்துளைக் கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை அங்கு கொண்டுசென்றுள்ளது. இதனையறிந்த அப்பகுதி கிராம மக்கள், மேற்படி பணிகள் மீத்தேன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் என்று கருதி, 19.5.2017 அன்று அப்பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓ.என்.ஜி.சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சனை தொடர்பாக, கும்பகோணம் சார் ஆட்சியர் 25.5.2017, 27.5.2017 மற்றும் 31.5.2017 ஆகிய நாள்களில் கிராம மக்கள் மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில், கிராம மக்கள் அந்நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இந்நிலையில், கடந்த 2.6.2017 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனம், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, காவல்துறை பாதுகாப்புடன் மேற்படி கிணற்றில் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியது. இதனையறிந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ஒன்பது நபர்கள், பராமரிப்புப் பணிகளைத் தடுக்க முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கிணற்றின் அருகே கூடிய கிராம மக்கள் சுமார் 93 பேரும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஜெயராமன் மற்றும் ஒன்பது நபர்கள், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, மற்றவர்கள் காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலுக்குட்படுத்தப்பட்ட ஜெயராமன் மற்றும் ஒன்பது பேர், 6.6.2017 அன்று பிணையில் வெளிவந்தனர். கடந்த 5.6.2017 அன்று மீண்டும் கதிராமங்கலம் கிராம மக்கள் 400 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டபோது, வருவாய் மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியாகக் கலைந்துபோகச் செய்தனர்.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினர், 2.6.2017 முதல் மேற்படி கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், 30.6.2017 அன்று காலை, கதிராமங்கலம்-பந்தநல்லூர் சாலையில் வனதுர்கை அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் தரிசு நிலம் ஒன்றில் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாயில் கசிவு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக அதிகாரிகள், வருவாய் மற்றும் காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் கதிராமங்கலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 150 பேர் அவ்விடத்தின் அருகே கூடி, சாலையில் அமர்ந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக அதிகாரிகளை அவ்விடத்திற்குச் செல்லவிடாமல் தடுத்ததுடன், மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டுமென வலியுறுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எடுத்துக் கூறியும் கேளாமல், எரிவாயுக் குழாய் கிணறு ஒன்றின் அருகில் சாலையில் பரப்பிவைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் உள்ளிட்ட பொருள்களுக்குத் தீ வைத்ததுடன், அவர்களுள் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.

மேலும் கப்ஸா நிருபரிடம் கூறும்போது: கிராம மக்களுடன் ஐசிஸ் தீவிரவாதிகளும் கலந்து காவல் துறை மீது கல் வீசி இருப்பார்கள் என நம்புகிறேன். மெரினா கலவரத்தின் போது எப்படி ஓபிஎஸ் ஒசாமா பின்லேடன் படத்தை காட்டி மக்களை முட்டாளாக்கினாரோ, அதே போல் கதிராமங்கலம் கலவரத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சிரித்தார்.

பகிர்

There are no comments yet