தமிழகத்தைக் காக்க கமலுக்கு ஒரு நாள் முதல்வர் வாய்ப்பளிக்க வேண்டும் என அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தனது சமூகவலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்து வருபவர் கமல். தற்போது நிலவும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பாகவும் கமல் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். திரையுலகினர் பலரும் கமலின் கருத்துகளுக்கு தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “”‘முதல்வன்’ படம் போல் வாய்ப்பு கிடைத்தால், அதாவது ஒருநாள் முதல்வராக ஒருவரை நியமிக்க முடியுமென்றால், கமலஹாசனுக்கு அப்பதவியை ஒருநாளைக்கு தமிழகத்தைக் காக்க வாய்ப்பளிக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் போதும். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது மட்டும் நடந்தால் கமல் தனது புதிய சிந்தனைகளால் அரசை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வார். இது என்னுடைய தனிப்பட்ட ஆசை. நான் தவறாக ஏதும் கூறியிருந்தால் இந்தக் குழந்தையை மன்னியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இதையடுத்து கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், சின்ராஜ், மனோகரன், சரவணன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இது குறித்து, மாஃபா பாண்டியராஜன் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அண்ணன் ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் ஆவார் என்று நம்பிக்கையில்லை, அதனால் எப்படியாவது எடப்பாடிக்கு இடைஞ்சல் செய்யலாம், கொஞ்சம் குடைச்சல் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து, கமலுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று உள்ளோம். ஓபிஎஸ் தியானம் செய்து, ஆன்மா என்று பிதற்றியபோது கமல் ஆதரவு தெரிவித்தார். அதற்க்கு கைமாறாக கமலுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி கொடுக்க நாங்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளோம் என்றார்.

There are no comments yet