சென்னை: அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இன்று சந்தித்து பேசி வருகிறார். அதிமுக அம்மா அணியும் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் டிடிவி தினகரனை ஓரம்கட்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் டிடிவி தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின்படி அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பிறகு எனது கட்சி பணிகளை தீவிரப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இன்று மாலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குற்றப் பரம்பரை படம் எடுக்க பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். குற்றம் செய்வதையே பாரம்பரியமாக கொண்டுள்ள சின்னம்மா சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரனை சந்தித்து, ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு உதவி செய்தது போல் எனக்கும் கொஞ்சம் பண உதவி செய்தால் அவரையே கதாநாயகனாக போட்டு குற்றப்பரம்பரையை முடித்து விடலாம் என்று நினைத்து அவரை சந்தித்தேன் என்றார்.

There are no comments yet