This article is reproduced from Vinavu

எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்ல, இந்துத்துவத்திற்கும் போதாத காலமிது. மயிலாப்பூர் மாமாக்களின் அரட்டைகளை வைத்து சபா நாடகம் என்றொரு மொக்கை பூமியில் துட்டு பார்த்த சேகர் அம்மா கட்சியில் இருந்து கடைசியில் தனது தாய்க்கட்சியான பாஜகவில் சேர்ந்தாலும் சேர்ந்தார். பிறகென்ன, தமிழக பாஜகவை வச்சு செய்வதற்கு அன்னார் பெரும்பாடு படுகிறார்.

அவரால் எளிமையான அண்ணாச்சி என்று புகழப்பட்ட தாது மணற்கொள்ளையர் வைகுண்டராசன், மல்லையா – ஜெயாவின் சாராய ஆலைகள், அதானியின் புறம்போக்கு வளைப்புக்கள், பாஜக தலைவர்களின் கசமுசா சமாச்சாரங்கள் போன்ற பதக்கங்களை குத்தியிருக்கும் சேகர், இவ்வகை ஊழல்களை வைத்து திராவிடம் என்றால் என்ன என்று விளக்கியிருந்தார். அதில் திராவிட இயக்கத்தின் பெயரில் ஓட்டுக் கட்சி ஊழல்களை பட்டியலிட்டிருந்தார். இந்த ஊழலில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதே பாஜகதான் என்பது அந்த முகரக்கட்டைக்கு தெரியவில்லை.

பிறகென்ன? தமிழ் ஃபேஸ்புக் மக்கள் #இந்துத்துவா ஹேஷ்டேக் போட்டு, சேகரை கதறக் கதற குதறி எடுத்து விட்டார்கள். அந்த சுவையான கொத்துப்புரோட்டாவை உங்களுக்காக சூடாக பரிமாறுகிறோம்.சுவைத்துப் பாருங்கள்! பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள்! குறையிருந்தால் சொல்லுங்கள், நம் மக்கள் அடுத்த பந்தியில் இன்னும் சுவையைக் கூட்டுவார்கள்!

_______________________________

LR Jagadheesan

அம்மன் #திராவிடம்
அம்பாள் #இந்துத்வா

எம் எஸ் சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் #இந்துத்வா
எல் ஆர் ஈஸ்வரியின் செல்லாத்தா #திராவிடம்

பஞ்சகச்சம்; பஞ்ச கவ்யம் #இந்துத்வா
லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி #திராவிடம்

மதுரைவீரனை வாசல்படிக்கு வெளியே நிறுத்தி வைத்தது #இந்துத்துவா
அவன் பேரன் பேத்திகளுக்கு இடஒதுக்கீடளித்து இணைத்துக்கொண்டது #திராவிடம்

நாராயணனை மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது #இந்துத்துவா
அலியை அரவாணியாக்கி பின் திருநங்கையாக கொஞ்சி மகிழ்ந்தது #திராவிடம்

“பிரம்மனின் உடலுக்கு வெளியே பிறந்தவர் (?!) பஞ்சமர் என்றும் அவரை பார்த்தாலே தீட்டென்றும், தொட்டால் இழுக்கென்றும் தள்ளிவைத்தது #இந்துத்துவா
திராவிடருக்கெல்லாம் ஆதிதிராவிடர் அவர்களென உரிமைகொண்டாடியது #திராவிடம்.

பெண்களுக்கு பொட்டுகட்டி பொதுமகளிராக்கியது #இந்துத்துவா
தேவதாசிகளையே அடியோடு ஒழித்து எல்லா பெண்களுக்கும் சொத்தில் சரிபாதி உரிமையை சட்டப்படி அளித்தது #திராவிடம்

தமிழ் ஒரு நீசபாஷை என கேலிபேசியது #இந்துத்துவா
உலக செம்மொழிகளில் தமிழும் ஒன்றென நிலைநாட்டி நிறுவியது #திராவிடம்

சகோதரனையும் சடுதியில் கொல் என்ற கீதையை வேதம் என்றது #இந்துத்துவா
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழரின் வாழ்நெறி என்றது #திராவிடம்

வாளோடு இந்தியாவுக்குள் வந்தமதம் இஸ்லாம் என்றது #இந்துத்வா
திரைகடலோடிய தமிழனோடு வந்த திரவியங்களில் அதுவும் ஒன்றென்றது #திராவிடம்

கற்பிக்காத கல்விக்குக்கூட கட்டைவிரலை காணிக்கை கேட்டது #இந்துத்வா
எல்லோருக்கும் உணவுடன் கூடிய இலவசக்கல்வியளித்தது #திராவிடம்

சிவனின் தொலைதூர தரிசனம் கோரி வந்த நந்தனை உயிரோடு எரித்துக்கொன்றது #இந்துத்வா
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றியது #திராவிடம்

தம்மைத்தவிர மற்ற அனைவரையும் தள்ளிவைக்கும் அக்கிரஹாரங்களை உருவாக்கியது #இந்துத்வா
எல்லா ஜாதிக்காரர்களும் சேர்ந்து வாழும் சமத்துவபுரங்களை அரசு செலவில் உருவாக்கியது #திராவிடம்

பேரிலிருந்தும் ஊரிலிருந்தும் ஜாதியை விரட்ட பாடுபட்டது #திராவிடம்
கருவறை துவங்கி கல்லறை வரை ஜாதியை பாதுகாக்க பாடுபடுவது #இந்துத்வா

ராமராஜ்ஜிய கனவுகண்ட காந்தியையே சுட்டுக்கொன்றது #இந்துத்வா
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் காந்திதேசமென பெயரிடச்சொன்னது #திராவிடம்

உடன்கட்டையை ஊக்குவிக்கச்சொன்னது #இந்துத்வா
கைம்பெண் மறுமணத்துக்காக ஓங்கிக்குரல் கொடுத்தது #திராவிடம்

இறைவனுக்கு சமஸ்கிருதம்; இசைக்கு தெலுங்கு; இந்தியாவுக்கு இந்தி என்றது #இந்துத்வா
இறைக்கும் இசைக்கும் தமிழ்; இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகுக்கும் ஆங்கிலம் என்றது #திராவிடம்

******

Thameem Tantra

இந்துத்துவம் என்றால் என்ன ?

இனிமே திருட்டுத்தனமா திங்க முடியாது என்பதற்காக முட்டையை வெஜிடேரியனில் சேர்த்தது, #இந்துத்துவா !

சைக்கிள்ல ஏன்டா லைட் எரியலனு கேட்டா, பின்னாடி ஒருத்தன் சைக்கிலே இல்லாம வர்ரான் அவன கேட்டையா என்பது #இந்துத்துவா !

தனக்கு மூத்திரம் குடிக்க புடிச்சிருக்கு என்பதற்காக, மூத்திரத்துல ஷக்தி இருக்கு என்று சொல்வது #இந்துத்துவா !

இந்தியாவிற்கு முகலாயர்கள் வந்தபோது கவ்பாய்யாகவும் மிஷன்னறிகள் வந்தபோது அவர்களுடன் doggy செய்தது #இந்துத்துவா !

சாராய புரோக்கர் மாமா சோ ராமசாமிதான் என் குருநாதர் என்று சொல்வது, அவர் செத்தவுடன் நாந்தான் அடுத்த மாமா என்று தன்னை தானே நினைத்துக்கொள்வதுதான் #இந்துத்துவா !

மாட்டுக்காக மனிதனை கொலை செய்தால் மூடிக்கொண்டு இருந்துகொண்டு , பாஜக அல்லாத எந்த கட்சி ஊழல் செய்தது என்ற செய்து கேட்டால் கூட ஐயோ பெருமாளே, நாடு எங்க போகுதுதன்னு தன் கணபதி பேக்கரியில் புலம்புவது #இந்துத்துவா !

தான் சார்ந்திருக்கும் காவி கொள்கையை வெளிய வெளிப்படையாக சொல்ல கூச்ச பட்டுக்கொண்டு, டே ஏன்டா மாப் மெண்டாலிட்டியில் இருக்கீங்கோவ், போய் வாழ்க்கையை பாருங்கோ என்று நமக்கு இன்பாக்ஸில் வெண்ண வெட்டி அட்வைஸ் செய்வது #இந்துத்துவா !

நச்சுனு பூணுல் போட்டு ஆவணி ஐட்டம் கொண்டாடிவிட்டு, எதுக்கு தேவை இல்லாம ஜாதி பேசறீங்கோ ? என்று வெக்கமே இல்லாமல் உளறுவது #இந்துத்துவா !

All Saffron Terrorists are Brahmins,
But not all Brahmins are Saffron Terrorists.
#spreadlove #PlsdontGeneralize #plspls #plspa #இந்துத்துவா !

தன் குடும்ப குலத்தொழிலான சாராய புரோக்கர் தொழிலலை கொண்டு தானும் தன் இறுதி மூச்சுவரை சாராய புரோக்கர்ராகவே வாழ்ந்த சோ ராமசாமிக்கு பத்மா புருஷன் விருது வழங்குவது #இந்துத்துவா !

தன் குடும்ப குலத்தொழிலான சாராய புரோக்கர் தொழிலலை கொண்டு தானும் தன் இறுதி மூச்சுவரை சாராய புரோக்கர்ராகவே வாழ்ந்த சோ ராமசாமிக்கு பத்மா புருஷன் விருது வழங்குவது #இந்துத்துவா !

சாஸ்தரம் ,கோத்திரம் அண்ட் மூத்திரம் is #இந்துத்துவா !

facebook description ல tambrahm, பில்டர் காப்பி addict,இங்கிலிஷ்ல caffeine addict, தச்சி மம்மு, பப்பு சாதம் is #இந்துத்துவா !

நீங்க ஏன் offend ஆறேல் ? நீங்களும் சாதி பேரு போட்டுக்கோங்கோ is #இந்துத்துவா !

மாட்டு ரத்தத்தை நெய்யாக உறுஞ்சி, மூத்திரத்தை சைடு டிஷ்சாக குடித்துவிட்டு, மூத்திர போதையில் மாடுதான் அம்மா என்று உளறுவது #இந்துத்துவா !

போட்டோஷாப்லையே வாழ்ந்து , இன்னமும் சீனாவை குஜராத்தாக நம்புவது #இந்துத்துவா !

Fake ID is #இந்துத்துவா !

******

Yuvan Swang
சிம்பிளா சொல்லனும்னா நீ என்னதான் கஷ்டப்பட்டு எவ்வளவு உயரத்துக்கு வந்தாலும் நீ துவங்கிய இடத்துக்கே உன்னை கொண்டு செல்ல காத்திருக்கும் பரமபத பாம்புதான் #இந்துத்துவா.

நீயும் நானும் ஒரே பைக்கில் போய் அடிபட்டு செத்தாலும் ஒரே மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம் செய்தாலும் உன் பொணத்தையும் என் பொணத்தையும் தனித்தனி சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வது #இந்துத்துவா.

Prakash JP
#இந்துத்துவா பார்பனீயம்ன்னா என்ன??

உள்நாட்டுல மாட்டுக்கறிய எதிர்த்துட்டு, மாட்டு கறியா வெளுத்து கட்டுற அமெரிக்கா, ஐரோப்பாவுல படிப்புக்கும், வேலைக்கும், தொழில் முதலீடுகளுக்கும் லைன் கட்டி, கையேந்தி நிற்பது… மாட்டுக்கறி சாப்பிடுறவுங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்ப வசதிகள வெக்கம்மே இல்லாம பயன்படுத்துவது..

Rajarajan RJ
#இந்துத்துவா னா என்ன அண்ணே? புருசன் செத்தா பெண்டாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து உடன்கட்டை ஏத்திவிட்டுறது!

Babu Shanthi
#இந்துத்துவா னா என்னவோய் ?

தேசத் தந்தைய கொன்னவனுக்கு சிலை வைக்க சொல்றவாளும்…
பசுவை கொல்ல கூடாதுன்னு சொல்லிண்டு, பிரியானி அண்டாவ திருடுறவாளும் தான்வோய் இந்துத்துவா…

Thananjayan Venkatraman
எதுக்காக பிரச்சினை பண்ணுதுனு நேரடியா சொல்லாது, பார்டருக்கு போ, பாகிஸ்தானுக்கு போனு சம்பந்தமில்லாம உளரும்.#இந்துத்துவா

Parimala Rajan
கொலை செய்த கோட்வுக்கு சிலை, கொலை செய்யப்பட்ட காந்திக்கு மாலை ! #இந்துத்துவா.

********

வாசுகி பாஸ்கர்…

* நையா பைசா வாங்காமல் பார்ப்பனருக்கு bouncer ஆ தன்னை அர்ப்பணித்த அடிமை இந்துத்துவா

* ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்க முடியுமா என அம்பேத்கர் கேட்ட போது, “நீ மதமே மாறிக்கோ” என மௌனம் காத்தது இந்துத்துவா

* சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்துத்துவா

* பெண்ணுக்கு சொத்தில் பங்கு கொடுத்த போது பெண்கள் சீரழிந்து விடுவார்கள் என்று சொன்ன சாடிஸ்ட்டை சாமியாக வணங்கும் கூட்டம் இந்துத்துவா

* இந்தியாவில் ஒரே ஒரு பணிக்கு மட்டும் “நீ பிறப்பெடுத்து வர வேண்டும்” என்பது இந்துத்துவா

* இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை விழுங்கி செரித்தது இந்துத்துவா

* அடிமைத்தனத்தை புன்முறுவலோடு ஏற்கச்செய்தது இந்துத்துவா

* மாதவிடாய் ரத்தத்தில் பிறந்து அந்த ரத்தத்தையே தீட்டு என்றது இந்துத்துவா

* கோவிலுக்கு வெளியே வாங்கினால் பிச்சை, உள்ளே வாங்கினால் “தட்சணை” என்று கௌரவ பிச்சை எடுப்பது இந்துத்துவா

* உணவு உடை மொழி என அனைத்தையுமே அரசியலாக்கியது #இந்துத்துவா

******

Vel Kumar
மணியாட்ட மெஷின் கண்டுபிடிப்பானுங்க!மலம் அள்ள மனுஷன அனுப்புவானுங்க..!#இந்துத்துவா

********

Shanmugapriyan Sivakumar

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணா ?…

பனியா பொருளுதவியில் ஆர்யப்பார்ப்பண கருத்திற்கு அதிகாரத்தின் ஆணிவேரான உளவுத்துறை வழிகாட்டலில் சூத்தராள்ஸ் அடிதடி போன்ற அடிமை சேவகம் செய்யுறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணா ?…

கருவறைக்குள் சென்று நம்மை சாமி கும்பிட முடியாத நிலையில் வெளியே வைத்திருப்பதும்
கருவறைக்குள் சென்று சாமி சிலையில் காண்டத்தை வைத்து சல்லாபம் செய்ய அய்யர் தேவநாதனை அனுமதித்திருப்பதும் தானம்மா …

இனவழிப்பாளனை தான் செய்த இன அழிப்பின் பரிசாக பிரதமராக்குவற்கு பெயர் தான்

#இந்துத்துவா என்றால் காமக்கொடூரனை ஜெகத்குரு என்றும்
கஞ்சாவியாபாரியை சத்குரு என்றும் சொல்வதாகும் !…

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

இவ்வளவு காரித்துப்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் பொது மக்கள் ஏமாறுவார்களா !? என எதிர்ப்பார்த்து கொண்டே நின்றிருந்து “Hinthuva or Hinthuism is not a religion its a way of life” நல்ல ஆங்கிலத்தில் திரும்ப ஏமாற்ற வருவது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சமஸ்கிருதத்தை தேவபாஷைன்னும் தமிழை நீசபாஷன்னும் சொல்லி அலைஞ்சி திரிஞ்சிட்டு அரசியல் புழப்புக்காக இன்னிக்கு தமிழ் தமிழன்னு சொல்லிக்கிட்டு வர மைலாப்பூர் மாமாக்கள் தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

இராப்பகலு பாக்காம கஷ்ட்டப்பட்டு படுச்சி நல்ல மார்க் வாங்கி IIT ல IIM ல இட ஒதுக்கீட்டில் படிக்கப்போன நம்ம வூட்டு புள்ளைங்கள பிணமா வீட்டுக்கு திருப்பி அனுப்புறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

உனக்கும் எனக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தனதாக்கிக் கொண்டு உன்னையும் என்னையும் சூத்திர பஞ்சமராய் பிரித்து ஆளுறது பெயரு தாம்மா

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சாமியார்கள் + மடங்கள் + சல்லாபம் + கொலை + கொள்ளை + அரசியல் அதிகாரம் + ஆரியப்பார்ப்பணீயம் + உளவுத்துறை + வஞ்சம் + ஊடக லாபி + தரகு முதலாளித்துவம் இது தாம்மா .

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

குண்டு போட்ட சங் பரிவார இந்து சாங்கி பெண் சாமியாரை விடுதலை செய்துவிட்டு சகோதரன் செய்த குற்றத்திற்கு முஸ்லிம் என்ற காரணத்திற்காக தம்பி மேமனை தூக்கில் போடுவது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

ஆரிய பூமி என்ற பொய் புரட்டு கதைகள் வெளியாகிடும் என்கிற பயத்தில் தொல் தமிழர் வரலாறான சிந்து சமவெளி நாகரீகத்தை ஆதிச்சநல்லூர் புதைப் பொருட்களை மதுரை கீழடி நாகரீகத்தை அதன் தொண்மையை மூடி மறைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வரும் வந்தேறி மனப்பான்மை தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் எதிர்ப்பு போராட்டம் செய்த கூட்டத்தில் தலையைக் காட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பொழுது “மன்னித்துக்கொள்ளுங்கள் மேன்மைத் தாங்கிய ராணி அவர்களே !…” என்று கடிதம் எழுதிவிட்டு சிறையில் இருந்து வெளியாகி விடுதலைக்கு போராடியவர்களை காட்டிக்கொடுத்துவிட்டு “நாங்கல்லா அந்த காலத்துல சுதந்திர போராட்டத்துல வெள்ளைக்காரனை எதிர்த்து …” அப்படினு இப்போ வீரவணம் பேசிக்கிட்டு திரியுறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சக்தி – லக்ஷ்மி – சரஸ்வதி என்று பெண்களை தெய்வமாக புமாதேவி என்று பூமியை கங்கை – காவிரி – கோதாவரி என்று நதிகளை சமுத்திரா தேவி என்று கடலை பாரத மாத என்று தாய் நாட்டை வணங்கும் மதம் என்று சொல்லிக்கொண்டு அம்மதத்தின் தலைமை மட்டமான “காஞ்சி சங்கர மட”த்தில் அபலைப் பெண்களை அவமதிக்கும் வன்புணர்வு செய்யும் ஆதிக்க அதிகாரம் அநீதி தாம்மா…

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

“ஹிந்து கடவுள்” மநு தர்மத்தில் சொன்னபடி பெண்களை அதிகாரத்தை கைப்பற்ற ஆண்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் அஃற்றிணை உயிராக தேவைக்கான போகப்பொருளாகவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தும் பெண்ணடிமைத்தனம் தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

குண்டிக்கழுவ தண்ணீரும் குடிக்கக் கஞ்சியும் அற்ற வக்கற்ற நிலையில் தமது மக்களை நிற்க வைத்துவிட்டு இராமருக்கு கோவிலும் படேலுக்கு சிலையும் வைக்க நிதி ஒதுக்கி வல்லரசு கனவு காணும் நிலை தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

காலம் முழுதும் எதிர்த்து நின்ற சித்தர்களை புத்தர்களை சமணர்களை வெட்கமே இல்லாமல் ஹிந்துத்துவ மஹான்கள் என்று புளுகி திரிகிறது தாம்மா …

***********

ஞானக் கிறுக்கன்

இந்து மதத்தில் தீன்டாமை இல்லை #இந்துத்துவா

அப்புறம் என்ன கூந்தலுக்கு பொன்னார் கிழே உட்கார்ந்து இருக்காரு இதற்கு என்ன விளக்கம் கொடுக்க போறிங்க #காவி_டவுசர்ஸ்…

மற்ற ஆதாரங்கள்Reproduced from Vinavu
பகிர்

There are no comments yet