சென்னை: தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் 1200 திரையரங்குகள் மூடப்பட்டன. நாள்தோறும் 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாட்களில் 5 காட்சிகள். கடந்த 3ஆம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சியின் செயல்தலைவரான மு க ஸ்டாலின். இன்று சட்டமன்றத்தில் திரைத்துறைக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலக பிரமுகர்கள் முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் முதல்முறையாக திரைத் துறையினர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். “திரைத்துறைக்கு கேளிக்கை வரி விதிப்பை ஏற்க முடியாது. கேரளாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் திரைத் துறையினரின் வேண்டுகோளை ஏற்று கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்தது. அதுபோல் தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். நாட்டுக்கு நன்மை செய்யும் ரஜினியும் கமலும் வரிவிதிப்பி குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதையத் பொம்மை தலைவருமான மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார். கருணாநிதி தனது 17 வயதில் இருந்து தமிழ்த் திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘உலகக் கலைப் படைப்பாளி’ என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. தி.மு.க தலைவரான கருணாநிதியின் வழியில் அரசியல் களத்தில் செயல்படும் ஸ்டாலின் ஆகிய நான், தந்தை கருணாநிதியின் அரசியலுக்கு முந்தைய தாய்வீடான சினிமா, தொலைக்காட்சியிலும் நடிப்பில் கலக்கியிருக்கிறேன் என்பது இங்கு எத்தனைப் பேருக்குத் தெரியும்? இளம்வயதில் இரண்டு படங்கள், இரண்டு டிவி தொடர்களின் நடித்திருக்கிறேன். எனது நடிப்பில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிப்பரப்பான ’குறிஞ்சி மலர்’ தொடருக்கு தாய்மார்கள் பேராதரவு தெரிவித்தனர். நடிகராக சினிமாவில் நான் (மு.க.ஸ்டாலின்) முதன்முதலில் காலடி எடுத்து வைத்த திரைப்படம் 1988-ல் வெளியான ‘ஒரே ரத்தம்’. ஒரே ரத்தம் திரைப்படத்தில் எனது கதாப்பாத்திரப் பெயர் ‘நந்தக்குமார்’. என்னுடன் கிஷ்மு, கார்த்திக், ராதாரவி, பாண்டியராஜ், மனோரமா, சீதா, மாதுரி என்று எக்கசக்க நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு கதை, வசனம் சாட்சாத் மு.கருணாநிதி.

கடந்த தேர்தல் பிரசார காலத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தி.மு.க சார்பில் வெளியான ‘முடியட்டும் விடியட்டும்’ குறும்படத்திலும் நான் தான் ஹீரோ. ஆனால் மக்கள் ஜெயலலிதாவிற்கு வாக்களித்து, ‘திமுக ஒழியட்டும், என் சட்டை கிழியட்டும்’ என்ற நிலைக்குத் தள்ளினார்கள். 1988-க்குப் பிறகு திரை நடிப்புலகை விட்டுவிட்டு, அரசியல் நடிப்பில் வெற்றிகரமாக களம் கண்டு கொண்டிருந்தாலும், அதற்கு மாற்றாக எனது மகன் உதயநிதி, நான் ‘வராது’ என்று விட்ட ‘நடிப்பு’க் களத்தை ‘வா வா’ என்று ‘ஓகே ஓகே’ போன்ற மொக்கை திரைப்படங்கள் மூலம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மக்களிடம் சுருட்டிய பணத்தில் ரசிகளுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடித்து இம்சித்துக் கொண்டிருக்கிறார். எனவே எங்கள் ஊழல் குடும்பத்தின் ஆதி தொழிலான சினிமாவின் மீதான இரட்டை வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும். என் மகன் நடிப்பில் வெளிவரும் படங்களின் வருவாயில் தான் தலைவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சையும், எங்கள் குடும்பத்தினர் கால் வயிற்றுக் கஞ்சியும் குடித்துக் கொண்டிருக்கிறோம்.. தயவு செய்து எங்கள் பிழைப்பில் மண்னை போட்டு விடாதீர்கள்” என்று கப்சா நிருபரிடம் புலம்பி முடித்தார்.

பகிர்

There are no comments yet