சென்னை: சட்டப்பேரவையில் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டிவருவதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாது என்ற உறுதியை தமிழக அரசு கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பேசியதாவது: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமுழக விவசாயிகள் பிரச்சனையில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது. திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராடியபோது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் போன்ற ஒருவர் பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் வருத்தமளிக்கிறது. அவர் மீது முன்னதாக புகார் ஏதும் இல்லாத காரணத்தினால் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், வீடியோவில் இருப்பது அவரது ‘டூப்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை லன்ச் பிரேக்கில் சந்தித்த கப்சா நிருபர், “கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை மறந்துட்டீங்களா?” என்று கேள்வி எழுப்பினார். பதிலத்த முதல்வர்: “நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டீங்க, எம்.எல்.ஏக்கள் அணி தாவாமல் இருக்க என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். பேசாமால் என் உருவத்தை எம்.எல்.ஏக்களின் நெற்றியில் பச்சை குத்திவிடப் போகிறேன். அதன்மூலம் என் முதல்வர் நாற்காலி காப்பாற்றப்படும். 2016 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு அம்மாவால் அங்கிகரிக்கப்பட்ட, ஆசிர்வாதிக்கப்பட்ட திட்டம். அதனால் நாங்கள் குழந்தைகைகள் அழுதாலும் பச்சை குத்தாமல் விடவில்லை. தற்போது எம்.எல்.ஏக்கள் ஓட நினைத்தால் பின்புறம் குத்தவும் தயங்க மாட்டோம்.

அனைவருக்கும் பச்சை குத்தும் வரை நாங்கள் எங்கள் பணியை தொடர்வோம். எதிர்காலத்தில், குழந்தைகள் பிறந்த உடனே பச்சை குத்தப்படும். வெளி மாநிலங்களிருந்து வருவோர்க்கு பஸ், ரயில், ஏர்போர்ட், நிலையங்களில் பச்சை குத்தப்படும். தன்மானம் இல்லாத சில அதிமுக அடிமைகளால் தமிழினத்தை கொத்தடிமைகளாக்கும் முயற்சியில் வெற்றி காண்போம். அமைச்சர்கள் திட்டப்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தொடங்கி 5 வரூடம் ஆட்சி முடிவதற்குள் அனைவருக்கும் விருப்பத்திற்கேற்ப அம்மா, எம்.ஜி.ஆர் படங்கள் இலவசமாக பச்சை குத்தப்படும். அப்பாவி மக்கள் குழந்தைகளின் ரத்தத்தால் அம்மாவின் பாதங்களை பூஜை செய்வோம்!” என்று முழங்கினார்.

பகிர்

There are no comments yet