புது டில்லி: இந்தியா – சீனா இடையே சிக்கிம் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையில், சீனா, தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், அதை சமாளிக்க, நம் வீரர்கள், முகாம் அமைத்து, அங்கு தங்கியுள்ளனர். இந்தியா – சீனா – பூட்டான் எல்லையில் உள்ள டோகாலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பணிகளை, நம் ராணுவம் முறியடித்தது. இதனால், கடந்த சில வாரங்களாக,எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.’கடந்த, 2012ல், ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் பகுதியில், எந்த மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், அதை மீறி, சீனா மேற்கொள்ளும் முயற்சி, நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது’ என, மத்திய அரசு கூறி வருகிறது.
சீனா – பூட்டான் இடையே துாதரக உறவு இல்லை. அதே நேரத்தில், பூட்டானுக்கு இந்தியா, அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறது. இந்நிலையில், எல்லையில், சீன படைகள் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதாலும், பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்படாததாலும், முன்னெச்சரிக்கை யாக, நம் ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய சீன எல்லையில் பசுவின் கோமியத்தை தெளித்து அந்த இடத்தை சானிடைஸ் செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு 2,000 கோடிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாபா ராம்தேவ் நேரடியாக பிரதமர் மோடி தலைமையில் எல்லையில் கோமியம் தெளிப்பார் என்று தெரிகிறது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களும், எல்லையில் அணிவகுப்பு செய்து சீனாவை மிரட்டுவார்கள் என்று நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks