பெங்களூரு:’பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்’ என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு, ரூபா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத் தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை,டி.ஐ.ஜி.,யான நான்,ஆய்வு நடத்தியதை, தங் களுக்கு . இவ்வாறு அந்த அறிக்கையில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்களி டம் ரூபா கூறுகையில்இதே அறிக்கையை, ஊழல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்,” என்றார்.

இது குறித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஒருவர் கூறும்போது: ஜெயலலிதாவிற்கு உதவி செய்வதற்கு அவருடன் இருந்தவர் சசிகலா. அவரே தனது பொதுக்குழு கன்னி பேச்சில் ‘அக்கா சாப்டீங்களா’ என்று கூறி ஜெயாவிற்கு சாப்பாடு அனுப்பியதை குறிப்பிடுவார். அப்படிப்பட்ட சமையல்காரியாக இருந்த சசிகலா இரண்டு கோடி லஞ்சம் கொடுத்து தனக்கு சிறையில் சமையல்காரி வைத்துக்கொண்டிருப்பது அவரின் வானளாவிய வளர்ச்சியை அதிகாரத்தையும் காட்டுகிறது என்று ஆதங்கப்பட்டார்.

There are no comments yet