டெல்லி: இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். போதிய ஆதாரம் இல்லாததால் தினகரனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் டெல்லி போலீசார் திடீர் பல்டியடித்துள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கிலிருந்து தினகரன் தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தினகரன் தரப்புக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஒரு மாதம் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. போதிய ஆதாரம் இல்லை என்பதால் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

இது குறித்து டெல்லி போலீஸ் அதிகாரி கசமுசா சர்மா நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில், திகார் ஜெயிலை சுற்றிக் காட்டவே தினகரனை கைது செய்தோம், பின்னர் ஜாமினில் விடுவித்தோம். நாங்கள் எதிர்பாராதவாறு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் மேலிட உத்திரவுப்படி ஆதாரம் இல்லை என்று சொல்கிறோம். இது எல்லாமே மோடியின் திருவிளையாடல்கள் ஒன்று என்றார்.

There are no comments yet