பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே, சிறைறையில் சின்னம்மாவுக்கு ஆதரவாக நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார். சிறைக்குள் சசிகலாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தனி சமையலறையே செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக, இரண்டு கோடி ரூபாய் வரையில் சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்ற உண்மை வெளியாகி உள்ளது. ரூபா பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதிரடி இல்லாமல் இருந்ததில்லை. 2007-ம் ஆண்டு பா.ஜ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்தில் கால் வைத்தவுடன் கைது செய்தார். இந்த நடவடிக்கையை சக அதிகாரிகளே எதிர்பார்க்கவில்லை. பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றபோதுபெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற போது அரசியல்வாதிகளுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் அளித்து வந்த அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பைத் தளர்த்தினார். இதனைத் தொடர்ந்து, ‘பதவியில் இல்லாத முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிகப்படியான சேவைகள் வழங்கப்படுகின்றன’ எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகளையும் குறைத்து அதிரடி காட்டினார்.

சின்னம்மா குறித்து ரூபா தயாரித்த கப்சா ரிப்போர்டில் கூறி இருப்பதாவது: ‘போயஸ்கார்ட்டனை நாறடித்ததுனு ஜெயிலுக்கு அனுப்புனா சின்னம்மா, பரப்பன அக்ரஹார ஜெயிலையே நாறடிக்குது. அத தூக்கி திஹார்ல போடுங்க. அங்கதான் இதுங்க பருப்பு வேகாது. ஒரு ஊர் விட்டு மறு ஊர் வந்து ஊழல் செய்தார், இப்போது ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து ஊழல் செய்கிறார் இந்த கொள்ளைக்காரி. சிறையில் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய்கள் பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர்களின் நெருக்கம் குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுத்தப்பட வேண்டும். கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பு கிடைக்கக்கூடாது.. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும். ஜெயலலிதா 1991 முதல் ஆட்சி செய்ததிலிலிருந்து கோடி கோடியாக பணத்தை வாங்கி மட்டுமே பழக்க பட்ட கை முதல் முதலாக சிறை அதிகாரிகளுக்கு கோடி கோடியாக கொடுக்கிறது.” என்று கூறி உள்ளார்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் மோடி தலைமையிலான மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். பின்னர் மோடியின் மாஸ்டர்பிளான் படி ரூபா களமிறக்கப்பட்டார். முதலில் கிரண்பேடி பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. கிரண்பேடி பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆதரவு முதல்வர் நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுப்பதில் பிசியாக இருக்கிறார். அதனால் மோடியின் செல்லாத ரூபா களமிறக்கப்பட்டிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவின் முக்கியமான பொழுதுபோக்கே அழகிப் போட்டிகளில் பங்கு பெறுவதுதான். ‘மிஸ் தாவனகரே’ பட்டத்தையும் வென்றுள்ளார். பரத நாட்டியம் மற்றும் இந்துஸ்தானி இசையில் தேர்ந்தவர் ரூபா.

விவசாயிகள் ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்தியும் சந்திக்காத மோடி, பேவாட்ச் ஆங்கிலப்படத்தில் நடிக்கும் ப்ரியங்கா சோப்ராவை சந்திக்கிறார். நடிகைகளின் வனப்புக்கு சற்றும் குறையாத ரூபாவை வைத்து சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் விதித்த கெடுவுக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டங்களுக்கும் மத்திய உளவுத்துறை வைத்த அதிரடிதான் இந்தச் சோதனை. சசிகலா சிறையில் இருக்கும் வரையில், தங்களுக்குத் தேவையானதை தமிழகத்தில் சாதித்துக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறது டெல்லி பா.ஜ.க. என பக்தாள் ஒருவர் கிசுகிசுக்கிறார்.

பகிர்

There are no comments yet