மும்பை / டெல்லி: பிரதமர் மோடியின் படத்தை வைத்து ‘மீம்’ உருவாக்கிய ‘ஏஐபி’ என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ‘ஏஐபி’ என்ற மீம் உருவாக்கும் பக்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சமூக வலைதள பக்கத்தில் சினிமா, அரசியல் குறித்த மீம்கள் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவது வழக்கம். அந்த ‘ஏஐபி’ பக்கத்தில் நேற்று பிரதமர் மோடியைக் கேலி செய்வது போன்று ஒரு படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தப்புவாரா என்ன? அதற்கான ஒரு மீம்ஸை ரெடி செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டது இந்தக் குழு. பிரதமர் மோடி போன்றே உருவ ஒற்றுமையுள்ள நபர் ஒருவர், பேக்குடன் ரயில்வே நிலையத்தில், ரயிலுக்கு காத்திருப்பது போன்றும், அப்போது அவர் கையில் உள்ள செல் போனை இயக்குவது போன்றும் அந்த மீம்ஸை ரெடி செய்திருந்தனர் ஏஐபி குழுவினர். இந்தப் படம் பரவலாகச் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கிடையில், ட்விட்டர் பயனாளர் ஒருவர் ஏஐபி பக்கம் பிரதமர் மோடியைக் கேலிக்குள்ளாக்குவது எனக்கு வருத்தமளிக்கிறது என்று மும்பை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

உடனே மும்பை காவல்துறையினர் அந்த ‘ஏஐபி’ என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பக்கத்தை நடத்துபவர்களின் மீது அவதூறு வழக்குக்கான தண்டனைச் சட்டம் 500 மற்றும் இணையதளங்களில் அருவருப்பானவற்றை பரப்புதலுக்கான குற்றவியல் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மும்பை காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், அவர்கள் அந்த மீம்மை சமூக வலைதளத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இது குறித்து ஒரு பாஜக பண்டாரம் கூறும்போது, மோடியை மாடு மாதிரி சித்தரித்திருந்தால் மோடி கவலைப்பட்டிருக்க மாட்டார், ஆனால் நாயாக காண்பித்ததால் தான் பிரச்சினை. ஆனாலும் நாய் நன்றியுள்ளது என்றார்

பகிர்

There are no comments yet